அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து (விடியோ)
நேற்று அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தின் பால்ற்றிமோர் நகரிலுள்ள பாலமொன்றை அதன் கீழ் ஓடும் பற்றப்ஸ்கோ ஆற்றில் பயணம் செய்த கப்பலொன்று மோதித் தகர்த்ததன் காரணமாக சுமார் 6 பேர் மரணமாகியிருக்கலாமெனக் கூறப்படுகிறது.
இச்செய்தி குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த செய்தியில் “நான் இப் பாலத்தால் டெலவெயர் நகரிலிருந்து பல தடவைகள் காரிலும் ரயிலிலுமாகப் பயணம் செய்திருக்கிறேன்” எனத் தெரிவித்தமை வலைஞர்களால் நையாண்டி செய்யப்பட்டு வருகிறது. காரணம் இப்பாலத்தில் ரயில் பாதைகளே இல்லை.
1972 இல் நிர்மாணிக்கப்பட்ட பால்ற்றிமோர் ஃபிரான்ஸிஸ் ஸ்கொட் கீ பாலம் என அழைக்கப்படும் இப்பாலம் 1977 இல் பாவனைக்கு விடப்பட்டது. 1.6 மைல் நீளமான இப்பாலத்தில் நாளொன்றுக்கு 31,000 மக்கள் பயணம் செய்கிறார்கள். சம்பவ தினத்தன்று பால்ற்றிமோர் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ‘டாலி’ என்னும் பெயருடைய சிங்கப்பூர் கொடியுடனான சரக்கு கப்பல் இப் பாலத்தின் தூணொன்றை மோதியதால் பாலத்தின் பிரதான பகுதி முற்றாகத் தகர்ந்து ஆற்றில் வீழ்ந்துவிட்டது என்கிறார்கள். இவ்வேளை பாலத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த கட்டிடப் பணியாளர் 8 பேர் ஆற்றுக்குள் விழுந்தனரெனவும் அவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டுவிட்டதாகவும் மீதிப்பேரைத் தேடும் முயற்சி தற்போது கைவிடப்பட்டுள்ளதெனவும் கூறப்படுகிறது.
இக்கப்பலின் மாலுமிகள் அனைவரும் இந்திய நாட்டவர்கள் எனவும் அவர்கள் எவருக்கும் உயிராபத்து இல்லை எனவும் அறியப்படுகிறது. இயந்திரக் கோளாறு காரணமாக கப்பல் நீரோட்டத்தால் இழுக்கப்பட்டு பாலத்தில் மோதியதெனவும் சம்பவம் நிகழ்வதற்கு வெகு நேரத்திற்கு முன்னரேயே மாலுமிகள் அபாயச் சமிக்ஞையான ‘மே டே’ (May Day) அறிவிப்பைச் விட்டு அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன