அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் கட்சிக்கு பெரும்பான்மை
அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரநிதிநிதிகள் சபையில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது

இதில் கீழ்சபையான நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 435 இடங்களும், மேல் சபையான செனட் சபையில் 105 இடங்களும் உள்ளன. அதிபர் தேர்தலும், நாடாளுமன்ற சபைக்கான தேர்தலும் தனித்தனியாகவே நடத்தப்படும். அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என்ற நிலையில் செனட் சபை உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டுகளாகவும், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகவும் உள்ளன. இந்நிலையில் தான் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான 435 இடங்களுக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும் தேர்தல் நடந்தது.
அமெரிக்காவில் நாடாளுமன்ற தேர்தல் 2024ல் நடைபெற உள்ளது. இதற்கு 2 ஆண்டுகள் உள்ள நிலையில் இது இடைத்தேர்தல் என அழைக்கப்பட்டது. இதில் தற்போதைய ஜனநாயக கட்சி மற்றும் வகிக்கும் குடியரசு கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி செனட் சபையை கைப்பற்றியது. 435 உறுப்பினர்கள் பிரதிநிதிகள் சபையை பொறுத்தவரையில் பெரும்பான்மை பெற 218 உறுப்பினர்கள் வேண்டும்.
இதில் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தால் அதிபர் ஜோ பைடனுக்கு சாதகமாக இருக்கும். மாறாக டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையானால் அதிபர் ஜோ பைடனுக்கு நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும். அதாவது அடுத்த 2 ஆண்டுகளாக ஜோ பைடன் அதிபராக தொடர்ந்தாலும் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை இல்லாமல் இருந்தால் அது அவரது செயல்பாட்டை முடக்கும். இதனால் பிரநிதிநிதிகள் சபையின் தேர்தல் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில்தான் தற்போது தேர்தல் முடிவு முழுவதுமாக வெளியாகி உள்ளது. பிரதிநிதிகள் சபையில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையை பிடித்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதாவது பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 218 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக வெளியிட்டுள்ளன. 210 இடங்களுக்கும் அதிகமாக ஜனநாயக கட்சி கைப்பற்றியதாக தெரிகிறது. இதன்மூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் அதிபர் ஜோ பைடனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது