அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது சுடப்பட்ட பெண் மாண்டார்

Today, domestic terrorists attacked a foundation of our democracy: the peaceful transfer of power following free elections. We must reestablish the rule of law and hold them accountable. Democracy is fragile. Our leaders must live up to their responsibility to protect it. By :Hillary Clinton @twitter

அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆதரவாளார்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆர்பாட்டம் நடத்தியபோது அந்தப் பெண் எவ்வாறு சுடப்பட்டார் என்பது தெளிவாக தெரியவில்லை.

ஆர்ப்பாட்டக்காரர்களை ஒதுங்கிச் செல்லுமாறு அதிகாரிகள் எச்சரித்த பிறகு, வேட்டுச் சத்தம் கேட்டதாய் தகவல்கள் கூறின.

அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றக் கட்டத்தினுள் நுழைந்தனர்.

அவர்கள் சன்னல்களை உடைக்க, காவல்துறையினர் கண்ணீர் புகையைப் பயன்படுத்துவது காணொளியில் தெரிகிறது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!