அமெரிக்க Independence Day -July 4
Independence Day (colloquially the Fourth of July) is a federal holiday in the United States commemorating the Declaration of Independence of the United States, on July 4, 1776. The Continental Congress declared that the thirteen American colonies were no longer subject (and subordinate) to the monarch of Britain, King George III, and were now united, free, and independent states. The Congress had voted to declare independence two days earlier, on July 2, but it was not declared until July 4.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது ஐக்கிய அமெரிக்கா, (United States of America / USA / US) பொதுவாக அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. இது ஐம்பது மாநிலங்களும் ஓர் கூட்டரசு மாவட்டமும் ஐந்து தன்னாட்சி ஆட்பகுதிகளையும் மற்றும் பல துய்ப்புரிமை உடைய பகுதிகளையும் கொண்ட கூட்டாட்சி அரசியல் சட்ட குடியரசு நாடாகும். 3.8 மில்லியன் சதுர மைல்கள் (9.8 மில்லியன் கிமீ2) பரப்பும் 325 மில்லியன் மக்களும் கொண்ட ஐக்கிய அமெரிக்கா உலகின் பரப்பினடிப்படையில் மூன்றாவது- அல்லது நான்காவது-மிகப்பெரும் நாடாகவும் மூன்றாவது-மிகுந்த மக்களதொகை உள்ள நாடாகவும் திகழ்கிறது. இதன் தலைநகர் வாசிங்டன், டி. சி.. மிகுந்த மக்கள்தொகை கொண்டது நியூயார்க் நகரம். 48 மாநிலங்களும் தலைநகரம் உள்ள கூட்டரசு மாவட்டமும் வட அமெரிக்கா பெருநிலத்தில் கனடாவிற்கும் மெக்சிக்கோவிற்கும் இடையே தொடர்ச்சியாக உள்ளன. அலாஸ்கா மாநிலம் வட அமெரிக்காவின் வடமேற்கு மூலையில் கிழக்கில் கனடாவுடனும் மேற்கில் பெரிங் நீரிணையைக் கடந்து உருசியாவிடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. அவாய் மாநிலம் நடு-அமைதிப் பெருங்கடலில் உள்ள ஓர் தீவுக்கூட்டம். ஐக்கிய அமெரிக்க ஆட்பகுதிகள் அமைதிப்பெருங்கடலிலும் கரிபியக் கடலிலும் சிதறியுள்ளன; இவை ஒன்பது அலுவல்முறை நேரவலயங்களில் பரந்துபட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் மிகவேறுபட்ட புவியியல், வானிலை, வனவுயிர்கள் காரணமாக உலகின் 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றாகவுள்ளது.
உலகில் பன்முக இனங்களையும் பலவித பண்பாடுகளையும் மிக அதிகளவில் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும். அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, 2008 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, கொள்முதல் திறன் ஒப்பீட்டில் இது ஏறக்குறைய 21%).
அட்லாண்டிக் கடல்படுகை மீது அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. சூலை 4, 1776 அன்று, விடுதலை பிரகடனத்தை வெளியிட்டனர். அமெரிக்க புரட்சி போரில் எதிர்ப்பு அரசாங்கங்கள் இங்கிலாந்தை தோற்கடித்தன. இதுதான் வெற்றிகரமான முதல் குடியேற்ற நாடுகளின் விடுதலைப் போராகும். தி பிலடெல்பியா கூட்ட வரைவில் நடப்பு அமெரிக்க அரசியல்சட்ட தீர்மானம் செப்டம்பர் 17, 1787 அன்று நிறைவேற்றப்பட்டது; அதனை அடுத்த ஆண்டில் உறுதி செய்து மாநிலங்களை ஒரு வலிமையான நடுவண் அரசாங்கத்தின் கீழான ஒற்றைக் குடியரசாக மாற்றியது. பல அடிப்படை குடிமுறைக்குரிய உரிமைகளை உறுதி செய்யும் பத்து அரசியல்சட்ட திருத்தங்களை அடக்கிய உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் நிறைவேறியது..
19 ஆம் நூற்றாண்டில், பிரான்ஸ், எசுப்பானியா, இங்கிலாந்து, மெக்சிகோ மற்றும் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா நிலங்களைப் பெற்றது. மேலும் டெக்சஸ் குடியரசையும் மற்றும் ஹவாய் குடியரசையும் இணைத்துக் கொண்டது. விவசாயம் தெற்கிற்கும் தொழில்துறை வடக்கிற்கும் இடையில் எழுந்த சண்டைகளும் அடிமை நிறுவனங்களின் விரிவாக்கங்கலும் 1860களில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்தன. வடக்கின் வெற்றி நாட்டின் பிரிவினையை தடுத்தது. மேலும் அடிமைமுறை முடிவுக்கு வந்தது. 1870களில், அமெரிக்கப் பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது. ஸ்பெயின் – அமெரிக்க போரும் முதலாம் உலகப் போரும் ஒரு ராணுவ சக்தியாக நாட்டின் அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போருக்கு பின், அணு ஆயுதங்கள் கொண்டிருந்த முதலாவது நாடாக இருந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒரு நிரந்தர உறுப்பினராக, மற்றும் நேட்டோ அமைப்பின் நிறுவனராக அமெரிக்கா வெளிப்பட்டது. பனிப் போர் முடிவுக்கு வந்ததும் சோவியத் ஒன்றியம் உடைந்ததும் அமெரிக்கா தான் ஒட்டுமொத்த வல்லரசு என்றானது. உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினத்தில் இந்நாடு சுமார் 50% கொண்டுள்ளது, உலகின் முன்னணி பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சக்தியாகவும் உள்ளது