அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் மே 31-ல் நல்லடக்கம். பொதுத்தேர்தலில் ஜீவன் களமிறக்க தீர்மானம்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் நேற்று (26) காலமானார் உடல் மே 31-ல் நல்லடக்கம் செய்யப்படும். அமைச்சரின் மரணச்செய்தி கேட்டு மலையக மக்களுக்கு மாத்திரமின்றி தமிழினத்திற்கும் பேரிழப்பு என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். எவருக்கும் அஞ்சாமல் தனது கருத்தை துணிச்சலுடன் எடுத்துரைக்கும் ஒரு மிடுக்கான அரசியல் தலைவராக அவர் திகழ்ந்ததாக வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலில் அமைச்சர் ஆறுமுகன் பதிலாக ஜீவன் தொண்டமானை களமிறக்க தீர்மானம்
காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமானை களமிறக்குவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இன்று மாலை பிரதமர்வுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த கோரிக்கையினை பிரதமரிடம் முன்வைத்திருந்தது.
அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிரதமர் அதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுப்பதாகக் கூறியதாக பிரதமரின் அலுவலகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது