அரசியலமைப்புக்கான 20 வது திருத்தம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

“அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம்” எனும் சட்டமூலம் இன்று சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இது நீதி அமைச்சரினால் 2020 செப்டெம்பர் 22ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்றும் தொடரப்பட்டது.
சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு, பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டது (ஆதரவாக 156; எதிராக 65). குழுநிலையைத் தொடர்ந்து, சட்டமூலம் மீதான மூன்றாம் மதிப்பீடு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 156; எதிராக 65) மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் இரண்டாம் வசிப்பு மீதான வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருக்கவில்லை. இந்த நிலையில், 19 ஆவது திருத்தமானது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்த காலப்பகுதியில் கொண்டுவரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது