அவுஸ்திரேலியாவின் அரசாங்கத்தால்(Australian Government) நேரடி உதவித் திட்டம் 2020-21 – இலங்கை மற்றும் மாலைதீவு
நேரடி உதவித் திட்டம் நிதியாண்டு 2020-21 – இலங்கை மற்றும் மாலைதீவு
நேரடி உதவித் திட்டம் (DAP) என்றால் என்ன?
நேரடி உதவித் திட்டம் (DAP) என்பது, அவுஸ்திரேலிய அரசினால் நிதியிடப்படும் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின்(DFAT) வெளிநாட்டுப் பதவிகளினால் முகாமைத்துவம் செய்யப்படும் போட்டி மற்றும் நெகிழ்வுத்தன்மையுடைய சிறிய மானிய உதவித் திட்டமாகும். இது நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் வறுமைக் குறைப்புக்கும் பங்களிப்புச் செய்யும் அவுஸ்திரேலியாவின் பரந்த உதவித் திட்டத்துக்கமைய உறுதியான அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட திட்டங்களுக்கு ஆதரவளிக்க முனைகின்றது. நேரடி உதவித் திட்டங்கள் அவுஸ்திரேலியாவின் தனித்துவமான மற்றும் சாதகமான பிம்பத்தினை முன்னேற்ற வேண்டும்.
இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
இலங்கையில் அல்லது மாலைதீவில் அமைந்துள்ள அல்லது அலுவலகங்களைக் கொண்டுள்ள, சட்டப்படி பதியப்பட்ட சமூகக் குழுக்கள், உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள், கல்வியியல் அமைப்புகள், சுதந்திரமான அமைப்புகள், அல்லது நிறுவனங்கள் போன்றவற்றிற்கு இலாப நோக்கற்ற அடிப்படையிலான நேரடி உதவித் திட்டம் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது. (தனி நபர்களால் கருத்திட்டங்களைச் சமர்ப்பிக்க முடியாது). இறுதிப் பரிசீலனைக்கான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள கருத்தியல் குறிப்புக்களைச் சமர்ப்பித்த நிறுவனங்களினால் மாத்திரமே பூரண முன்மொழிவுக்காக விண்ணப்பிக்க முடியும்.
நேரடி உதவித் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படும் சகல கருத்திட்ட முன்மொழிவுகளும் பின்வருவனவற்றினைப் பூர்த்திசெய்யவேண்டும்:
- அலுவலக அபிவிருத்தி உதவியாக தகமை பெறல் (ODA) ( OECD இனால் வரையறுக்கப்பட்டது போன்று).
- அவுஸ்திரேலிய டொலர் 60,000 வரையான செலவு.
- ஒரு வருடம் வரையான குறிப்பிட்ட காலத்தினைக் கொண்டிருத்தல்.
· இலங்கையில் அல்லது மாலைதீவில் அமைந்துள்ள அல்லது அலுவலகங்களைக் கொண்டுள்ள, சட்டப்படி பதியப்பட்ட சமூகக் குழுக்கள், உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள், கல்வியியல் அமைப்புகள், சுதந்திரமான அமைப்புகள், அல்லது நிறுவனங்கள் (தனி நபர்களால் கருத்திட்டங்களைச் சமர்ப்பிக்க முடியாது).
- 13 நவம்பர் 2020, பி.ப.5.00 (இலங்கை நேரம்) மணியளவில் பெறப்படவேண்டும்.
- கருத்திட்ட ஆரம்பத் திகதி 1 ஏப்ரல் 2021.
- மேலதிக தகவல்களுக்குத் தொடர்புகொள்க DAP@slsu.lk or +94771454308
- விண்ணப்பப் படிவங்களை அணுகுவதற்கு :
o ஆங்கிலம்: https://dap.smartygrants.com.au/COLDAPCN2020-21English
o சிங்களம்: https://dap.smartygrants.com.au/COLDAPCN2020-21Sinhala
o தமிழ்: https://dap.smartygrants.com.au/COLDAPCN2020-21Tamil
பின்வருவனவற்றில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவற்றினைத் தீர்க்கும் கருத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்:
இலங்கைக் கருத்திட்டங்களுக்காக:
· சுகாதாரப் பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்த்தல். இதில் நீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் அவசரகாலநிலை ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் பொதுச் சுகாதார விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் உள்ளடங்குகின்றன;
· உறுதியானதும் ஒத்திசைவானதும் உள்ளடக்கும் தன்மைமிக்கதுமான சமூகங்களை மேம்படுத்தல். இதில் ஆளுகை, சமூகப் பாதுகாப்பு, பால்நிலை அடிப்படையிலான வன்முறை மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள் உள்ளடங்குகின்றன.
· பொருளாதார மீளலுக்கு ஆதரவளித்தல். இதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள், முறைசாராத் துறைத் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற வறியோர் ஆகியோருக்கு நிலைபெறுதகு மற்றும் உள்ளடக்கும்தன்மைமிக்க வாழ்வாதார வாய்ப்புக்கள் உள்ளடங்குகின்றன.
மாலைதீவுக் கருத்திட்டங்களுக்காக:
· சுகாதாரப் பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்த்தல். இதில் நீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் அவசரகாலநிலை ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் பொதுச் சுகாதார விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் உள்ளடங்குகின்றன;
· உறுதியானதும் ஒத்திசைவானதும் உள்ளடக்கும் தன்மைமிக்கதுமான சமூகங்களை மேம்படுத்தல். இதில் ஆளுகை, சமூகப் பாதுகாப்பு, பால்நிலை அடிப்படையிலான வன்முறை மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள் உள்ளடங்குகின்றன.
· பொருளாதார மீளலுக்கு ஆதரவளித்தல். இதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோருக்கு நிலைபெறுதகு மற்றும் உள்ளடக்கும்தன்மைமிக்க வாழ்வாதார வாய்ப்புக்கள் உள்ளடங்குகின்றன.
பின்வருவனவற்றிற்கு நாம் பொதுவாக நிதியுதவியளிக்க மாட்டோம்:
- பணக் கொடைகள் அல்லது நுண் நிதிக் கடன் திட்டங்கள் அல்லது பணத்தினை மீள வழங்குதல் சம்பந்தப்படும் கருத்திட்டங்கள்
- வர்த்தக முயற்சிகள்
· பாரிய சொத்துக் கொள்வனவுகள் (உம்: வாகனங்கள்)
· அவுஸ்திரேலியா அல்லது வெளிநாடுகளில் கல்விச் சுற்றுலா
· சர்வதேசப் பயணம்
· மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் அல்லது தெளிவான அபிவிருத்தி நன்மைகளைக் கொண்டிராத கலாசார நிகழ்வுகளுக்கான அனுசரணை.
· நிறுவனத்தின் நிர்வாகச் செலவு கருத்திட்டத்தின் பெறுமதியின் 10 சதவிகிதத்தினை விடக் குறைவானதாக இருக்கவேண்டும். அரச சார்பற்ற நிறுவனங்களின் 10 சதவிகித ஆகக்கூடுதலான நிர்வாகச் செலவுக்கு அப்பால் பொதுவான சம்பளங்கள், வாடகை அல்லது மேந்தலைச் செலவுகளுக்கு நேரடி உதவித் திட்டம் நிதியளிக்காது. கருத்திட்டத்துடன் தொடர்புடைய கருத்திட்டப் பணியாளர்களின் சம்பளங்கள் உள்ளிட்ட கருத்திட்டச் செலவுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
நேரடி உதவித் திட்டம் போட்டித்தன்மைமிக்க ஒரு செயன்முறையாகும். தெரிவுச் செயன்முறை இரண்டு படிகளைக் கொண்டுள்ளது: முதலாவது, ஒரு சுருக்கமான கருத்தியல் குறிப்பு தேவைப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து இறுதிப் பரிசீலனைப் பட்டியலிலுள்ள விண்ணப்பங்களுக்கான பூரண முன்மொழிவு தேவைப்படுகின்றது. பூரண கருத்தியல் குறிப்பினைச் சமர்ப்பிப்பது கொடையினையும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்துடனான ஒப்பந்தத்தினையும் உத்தரவாதப்படுத்தாது என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். விண்ணப்பதாரிகளுக்கு நேரடி உதவித் திட்ட (DAP) கொடை ஆணைக்குழுவின் தீர்மானம் அறிவிக்கப்படும். வெற்றிபெற்ற விண்ணப்பதாரிகள் ஒப்பந்தத்தினை உருவாக்கும் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்காக ஏற்றுக்கொள்ளப்படுவர். இதில் SLSU வின் உதவியுடன் பூரண மதிப்பீட்டினை மேற்கொள்ளும் செயன்முறை உள்ளடங்குகின்றது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான அல்லது நிராகரிப்பதற்கான உரிமையினை உயர் ஸ்தானிகராலயம் கொண்டுள்ளது என்பதுடன் அதன் தீர்மானங்களே இறுதியானவையாக இருக்கும்.