NationNews

இங்கிலாந்தில் G20 Summit தொடங்கியது 11–13 June 2021 உலக தலைவர்கள் முதன்முறையாக நேரில் சந்திப்பு

ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு

The 47th G7 summit was held on 11–13 June 2021 in Cornwall in the United Kingdom while it holds the presidency of the G7

தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கனடா ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கியது ஜி-7 கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு இங்கிலாந்தின் காா்ன்வால் மாகாணத்தில் தொடங்கியது. கொரோனாவுக்கு பின் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இத்தாலி பிரதமர் மரியோ தராகி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயென், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!