ArticlesTechnologyகட்டுரைகணினித்தமிழ்முனைவர் துரை.மணிகண்டன்

இணையத்தில் தமிழ் எழுத்துருக்களும் அது கடந்துவந்த பாதையும்…- A Journey of Tamil Fonts In Internet

இணையத்தில் தமிழ் எழுத்துருக்களும் அது கடந்துவந்த பாதையும்… – A Journey of Tamil Fonts In Internet

முனைவர் துரை.மணிகண்டன் (இணையத்தமிழ் ஆய்வாளர்) உதவிப் பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா.

முன்னுரை

மணலில் எழுதி அழகுபார்த்த எழுத்துகள் இன்று கணிப்பொறிக்கு வளர்ந்துவந்த விதம் மிகவும் மகிழ்வானதுதான்.

புத்தம் புதிய கலைகள் –பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருதே மேற்கே- அந்த

மேன்மைக் கலைகள் தமிழில் இல்லை…”

என்ற பாரதியின் கவலையைக் கருத்தில் கொண்டு இந்த நவீனத் தொழில்  நுட்பங்களில் தமிழைக் கொண்டுவரப் பலர் முயற்சித்தார்கள். அப்படிக் கணிப்பொறியில் தமிழ் எழுத்துருக்களை (Found) உருவாக்கிப் பயன்படுத்திய வரலாறு போற்றுதலுக்கு உரியதாகும்.  எப்படி உரைப்பது இந்த மாற்றத்தை. பலர் ஒன்றுகூடி உருவாக்கிய எழுத்துருக்கள் மற்றும் ஒவ்வொருவரும் உருவாக்கிய எழுத்துருக்கள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த வகையில் இந்த ஆய்வுக்கட்டுரைத் தமிழ் எழுத்துருக்கள் எவ்வாறு தோற்றம் பெற்றது, வளர்ந்து வந்தது என்பதையும் இன்று பேசினாலே உரையாகக் கொடுக்கும் முறையின் வளர்ச்சியையும் விரிவாகக் காணலாம்.

எழுத்துரு – Found

உலக இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் எழுத்துரு என்ற ஒன்று அறவே இல்லை. தன் கருத்துகளைப் பிறருக்குத் தெரிவிக்கப் பறவைகள், விலங்குகள் மற்றும் இயற்கை ஒலிகளைப் பயன்படுத்தினார்கள். மனித சமுதாயம் முதலில் சைகை மொழிகள் மூலம் ஒருவருடைய கருத்தை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினர். அடுத்துப் பேச்சுமொழி உருவாகின்றன. அதன் பின்பு எழுத்து உலக இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் எழுத்துரு என்ற ஒன்று அறவே இல்லை. தன் கருத்துகளைப் பிறருக்குத் தெரிவிக்க பறவைகள், விலங்குகள் மற்றும் இயற்கை ஒலிகளைப் பயன்படுத்தினார்கள். மனித சமூதாயம் முதலில் சைகை மொழிகள் மூலம் ஒருவருடைய கருத்தை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினர். அடுத்துப் பேச்சுமொழி உருவாகின்றன. அதன் பின்பு எழுத்துமொழி உருவாகின்றன. இந்த எழுத்து மொழியானது பல்வேறு வழிகளில் வளர்ந்து வந்துள்ளதை வரலாறு நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

மொழி உருவாகின்றன. இந்த எழுத்து மொழியானது பல்வேறு வழிகளில் வளர்ந்து வந்துள்ளதை வரலாறு நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

எழுத்துரு உருவாக்கம்.

உலகமொழிகள் பலவற்றில் பல்வேறுவகையான எழுத்துரு உருவாகின. அவற்றில் முதலில் கற்களில் எழுதிய எழுத்து, பிறகு பாறைகளில் எழுதிய எழுத்து, அதன் பிறகு செப்பேடுகள், தோல்கள், ஓலைச்சுவடிகள் என இதன் பரப்பு நீள்கிறது. பின்பு 16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அச்சு இயந்திரங்களின் வளர்ச்சியால் அச்சுபொறித் தோன்றி அச்சில் எழுத்துருக்களைக் காணமுடிந்தது.

இணையத்தில் எழுத்துரு

இவ்வாறு அச்சுப் பொறியில் தோன்றிய எழுத்துருவைத் தொடர்ந்து இணையத்தில் தமிழ் எழுத்துரு தோற்றம் பெற்றது. இந்த எழுத்துரு தோற்றம் அவ்வளவு எளிமையாகத் தோன்றவில்லை. அது பல்வேறு படிநிலைகளைக் கடந்துதான் தமிழில் எழுத்துரு தோன்றியது.

தமிழில் எழுத்துரு தோற்றம்

1950 – ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கணினிப் பயன்பாடுகள் அதன் விழிப்புணர்வும் உலக அளவில் கவனம் பெற்றது. இந்தியாவில் 1980- களில்தான் கணிப்பொறியின் பயன்பாடுகள் பயன்பாட்டுக்கு வந்தன. இந்தக் கணினி வளர்ச்சியை 1990 முன்பு என்றும் 1990 பின்பு  என்றும் பிரித்துக் காணலாம். இதில் இந்தியாவில் 1981-இல் இந்திய அரசின் மின்னணுவியல் துறை தமிழிலும் இந்தியிலும் எழுத்துருக்களை உருவாக்க மின் சுற்றுகளைத் தயாரித்து 1883 – இல் டிசிஎம் டேட்டா புரோட்க்ட்ஸ் என்ற நிறுவனம் ‘திருவள்ளுவர்’ என்ற பெயரில் முதல் தமிழ், இந்தி கணினியைத் தயாரித்து,; வெளியிட்டுப்; பயன்படுத்தி வந்தன என்று பேராசிரியர் இராதாசெல்லப்பன் தமிழும் கணினியும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

1984-லிருந்து 1995 வரை

தமிழ் எழுத்துரு உருவாக்கம் என்பது தொடக்கக் காலங்களில் உருவான வரலாற்றை முழுமையாக அறியமுடியவில்லை. ஆனால் முதன்முதலில் தமிழ் எழுத்துரு உருவாகிய காலக்கட்டம் 1984 – இல்தான் என்பது அனைவராலும் உறுதிபடுத்தப்பட்டத் தகவல்களாக உள்ளது( முனைவர் துரை.மணிகண்டன் எழுதிய ’இணையமும் தமிழும்’, முனைவர் மு,பொன்னவைக்கோ எழுதிய ’இணையத்தமிழ் வரலாறு’, முனைவர் இராதாசெல்லப்பனின் ’தமிழும் கணினியும்’ எழில் நிலா இணையப்பக்கத்தில் நீச்சல்காரன் எழுதியுள்ள கட்டுரையிலும் ) 1984 – ஆம் ஆண்டு கனடாவில் வாழும் கலாநிதி சீனிவாசன் என்பவரால் வடிவமைக்கப்பட ‘ஆதமி’, ’ஆதவின்’, ‘திருவின்’ என்னும் குறியீட்டுமுறை எழுத்துருவை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சுவிஸர்லாந்தில் வசித்துவரும் கு. கல்யாணசுந்தரம் என்பவரால் 1985-ஆம் உருவாக்கப்பட்ட மயிலை எழுத்துருவாகும். இவை முறையே முதல் மற்றும் இரண்டாம் நிலையில் உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துருவாகும்.

பிற தமிழ் எழுத்துருக்கள்

1984,1985 ஆம் ஆண்டுகளிலுருந்து பல்வேறு தமிழ் எழுத்துருக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரத்தொடங்கின. அவைகளில் அமெரிக்காவிலுள்ள பெர்க்லி பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜார்ஜ். எல். ஹார்ட் என்பவர் உருவாக்கிய ‘தமிழ் லேசர்’ (TAMIL LASER) என்ற குறியீட்டு முறையும்; அமெரிக்காவில் வசித்த மருத்துவர் பெரியண்ணன் குப்புசாமி என்பவர் உருவமைத்த ‘அணங்கு’; அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த திரு.உமர்தம்பி என்பவரால் உருவாக்கப்பட்ட ‘தேனி’ இயங்கு எழுத்துரு; மலேசியாவில் இருக்கும் முத்தெழிலின் உருவாக்கிய ‘முரசு’;  முத்துநெடுமாறன் என்பவரால் உருவாக்கப்பட்ட ‘அஞ்சல்’; இரவீந்திரன்.கெ.பால் என்வரின் ‘துணைவன்2.3’;  கனடாவில் உள்ள தமிழ் ஆர்வளர் விஜயகுமார் என்பவர் உருவமைத்த ‘சரஸ்வதி’; 1990-இல் அமெரிக்காவைச் சார்ந்த தமிழ் ஆர்வலர் டி. கோவிந்தராசு என்பவர் உருவாக்கிய ‘பல்லாடம்’ குறியீட்டு முறையும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பலர் பலவிதமான குறியீட்டு முறையில் தமிழ் எழுத்துருவை உருவாக்கி வெளியிட்டு வந்தனர். அவற்றில் இந்திய CDAC நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ISCII- (Indian Script Code for Information Interchange), ISFOC என்னும் குறியீட்டு முறையும், மதுரைத்திட்டக் குழுவினரால் உருவாக்கப்பட்ட TSCII- (Tamil Standard Code for Information Interchange), சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி உருவமைத்த ‘கணியன்’ குறியீட்டு முறையும் குறிப்பிடத் தக்கவையாகும். இவைத் தவிர இந்தியாவில் மும்பை ACS Technologies, ஆர்.கலைமணியின் ‘தாரகை’(1994), மா.ஆண்டோ பீட்டரின் ‘சாப்ட்வியூ’, தியாகராசனின் ‘வானவில்’. கேச்சி நிறுவனத்தின் இணைமதி(1997), பாரிஸில் வாழும் கோபாலகிருஷ்ணன் என்பவர் ‘புதுச்சேரி’ என்ற பெயரில் ஒரு குறியீட்டுமுறையையும் அறிமுகம் செய்து பயன்படுத்தி வந்தார்கள்..

இவை அன்றி அமுதன், யாழன், பாரதி, கணியன், பாமினி, திரு.தியாகராஜனின் ’வானவில்’, திரு.மனோஜ் அண்ணாதுரை, சென்னைக் கவிகள், முனைவர் வெ.கிருஷ்ணமூர்த்தி, திரு.துலுக்கானம், திரு.க.இளங்கோவன், திரு.செல்லப்பன், திரு. வள்ளி ஆனந்தன் போன்றோர்கள் அவரவர்களுக்குத் தேவையான எழுத்துருவை உருவாக்கிப் பயன்படுத்தி வந்தனர். இவர்கள் மட்டுமன்றி பல்வேறு தனிநபர்களும் எழுத்துருவை உருவாக்கிப் பயன்படுத்திவந்தனர்.

இந்த எழுத்துருக்கள் அவரவர் கணிப்பொறியில் இயங்கும் முறையில் வடிவமைக்கப்பட்டது. இந்த எழுத்துருக்களில் பாரதி, கணியன், முரசு, ஆகியவை சிங்கப்பூர், மலேசியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆதமி எழுத்துரு அமெரிக்கா,கனடா, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தி வந்தனர். இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பாமினி எழுத்துருவை அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.

ஒருங்குறி எழுத்துரு (Unicode-யூனிகோடு)

இவ்வாறு 1984-ல் தொடங்கிய தமிழ் எழுத்துரு உருவாக்கம் திட்டம் தனிநபர்களால் உருவாக்கப்பட்டு அவரவர் கணிப்பொறியில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கனடாவில் இருக்கும் நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் ஒரு செய்தியைத் தமிழில் அடித்து கச்சமங்கலத்தில் இருக்கும் நண்பருக்கு அனுப்பினால் இங்கு அவரது கணினியில் எழுத்துருக்கள் தெரியவில்லை. எல்லாம் கட்ட கட்டமாகத் தெரியவந்தது. இவற்றைப் போக்கும்விதமாக என்ன செய்வது என்று சிந்திக்கும்போது உலகம் முழுவதிலும் பயன்படுத்தும் கணிப்பொறியாளர்களுக்கு ஒரே எழுத்துரு வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் அதன் விளைவு ஒருங்குறி எழுத்துருவை நாம் பாவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம்.பலருக்கு உருவாகின. இந்த இடைப்பட்ட காலத்தில் 1991 அமெரிக்காவில் உலகில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மொழிகளுக்கும் ஒரே எழுத்துருவை உருவாக்கிப் பயன்படுத்தும் முறையை உருவாக்க முனைந்து ஒரு நிறுவனத்தை உருவாக்கினார்கள். 1987 ஆம் ஆண்டு ஜாய் பேக்கர் (Joe Becker) என்பவரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஒருங்குறி (Found) திட்டமாகும்.

இந்த ஒருங்குறி திட்டத்தில் 1991 ஆம் ஆண்டு இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி,  மொழிகள் இணைக்கப்பட்டன. இதில் தமிழ்மொழிக்கான தமிழ் ஒருங்குறி எழுத்துருவை உருவாக்கப் பலர் முனைந்தனர். பலர் ஏற்கனவே உருவாக்கிய தமிழ் எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்ற முயற்சித்து வெற்றியும் பெற்றனர். தொடக்கக்காலத்தில் ஒருங்குறி சேர்த்தியம் 8பிட் அமைப்பில் எழுத்துருவிற்கு இடம் கொடுத்தது. பிறகு16 பிட் இட அமைப்பை உருவாக்கி உலக மொழிகளுக்கு எழுத்துக்களில் எண்ணிக்கையில் இடம் வழங்கியது. இதுவும் போதவில்லையென்று 32 பிட் இடம் உருவாக்கி அனைத்து உலக மொழிகளின் எழுத்துருக்களுக்கும் இடம் வழங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒருங்குறி தமிழில்

உலகில் பயன்படுத்தும் கணிப்பொறிகளில் ஒரே தமிழ் எழுத்துருக்கள் தெரியவேண்டும் என்று அனைவரும் பாடுபட்டனர். பலர் ஒருங்குறித் திட்டத்தை வரவேற்றனர். பேரா. பொன்னவைக்கோ அவர்கள் இதில் ஒருசிலவறை ஏற்க மறுத்தும் உள்ளார் என்பது வரலாறு. இருந்தாலும் இன்று ஒருங்குறி முறையை அனைத்துத் தமிழ்ப் பயன்பாட்டாளரும் ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றனர். இதற்கு உத்தமம் நிறுவனம் பலவழிகளில் முன்னின்று செயல்பட்டதை இங்குக் குறிப்பிட்டு ஆகவேண்டும். மேலும்  பல தனிநபர்களும் இந்த ஒருங்குறி எழுத்துருவிற்குத் தன்னால் ஆன உதவிகளையும் செய்து வந்து கொண்டிருக்கின்றனர்.

கலப்பை

உலக அரங்கில் தமிழ் ஒருங்குறி எழுத்துருவுக்கு அடித்தளம் இட்டவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் முரசு எழுத்துரு 2000- என்பதாகும். இதனைத் தொடர்ந்து பெங்களூரில் பணியாற்றிய மென்பொருள் தயாரிப்பாளர் திரு.முகுந்தராஜ் என்பவரின் முயற்சியால் இ-கலப்பை என்னும் மென்பொருள் ஒருகுறியீட்டில் பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இ-கலப்பை எழுத்துருவைக் கணினியில் நிறுவுதல், தொடர்ந்து யூனிகோடு எழுத்துருக்களை நிறுவுதல் என்ற இருசெயல்பாடுகளை உள்ளடக்கியதாக இம்மென்பொருள் உருவாக்கப்பட்டு வெளிவந்தது.

சுரதா

இலங்கை யாழ் நூலகம் எறிக்கப்பட்டதன் நினைவாக ஜெர்மனியில் வசிக்கும் சுரதா யாழ்வாணன் அவர்களால் 27/12/2002-இல் தொடங்கப்பட்ட சுரதா .காம் (http://www.suratha.com/reader.htm) மிகவும் முக்கியமான பணிகளைத் தொடக்கக் காலங்களில் செய்தது. ஆம்  2005-ஆம் ஆண்டு வாக்கில் தமிழ் எழுத்துருவை நாம் ஆங்கில ஒலிபெயர்ப்பில் அடித்தால் கீழே தமிழில் வரும்… அதனை ஒட்டி எடுத்து நாங்கள் மின்னஞ்சல் அனுப்பிய காலம். மேலும் பல எழுத்துருக்களை

ஒருங்குறிக்கு மாற்றிக்கொடுக்கும் பணியையும் செவ்வனே செய்துவந்தது. வருகிறது. இதுதான் எனக்குத்தெரிந்த முதல் தமிழ் ஒருங்குறி இணையதளமாகும். இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ளது.( http://suratha.com/)

NHM WRITER-

01-01-2008 ஆம் ஆண்டு கிழக்குப் பதிப்பக நிறுவனர் திரு.பத்ரிஷேசாத்திரி அவர்களின் நிதி உதவியுடன் மென்பொருளாலர் திரு K.S. நாகராஜன் அவர்களால் உருவாக்கப்பட்ட இலவசத் தமிழ் மென்பொருளாகும். (http://software.nhm.in/products/writer).

இந்தத் தமிழ் மென்பொருள் இதுவரை தமிழ் உள்ளிட்ட பத்து மொழிகளில் ஒருங்குறியில் செயல்படும் முறையில் வடிவமைக்கப்பட்டது.மேலும். இந்தியாவில் பலரால் பயன்படுத்தி வருகின்ற மென்பொருள்களில் இதுவும் ஒன்று.

அழகி

சென்னையைச் சேர்ந்த விஸ்வநாதன்  என்பவரால் 2000- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ் எழுத்துருதான் இந்த ’அழகி’ மென்பொருளாகும். இதுவும் தமிழ் உள்ளிட்ட பதினாறு (16) இந்திய மொழிகளில் ஒருங்குறியில் செயல்படும் மென்பொருளாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளில் மிக வேகமாகவும், இடத்திற்கு இடம் மாற்றியும் தட்டச்சு செய்வது மிகவும் இலகுவானதாக அமைத்திருப்பது இந்த மென்பொருளின் தனிச்சிறப்பாகும்

.

தமிழ் கையெழுத்து உணரி

கணிப்பொறி மற்றும் திறன்பேசியில் நாம் எழுதினால் போதும் அவை எழுத்துருவாக வடிவமைத்துக் கொடுக்கும் ’பொன்மடல்’ என்ற செயலியை அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் வெ.கிருஷ்ணமூர்த்தி என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன. எழுத்துருவே இல்லாத காலம் சென்று இன்று எழுதினால் அதனை எழுத்துருவாக மாற்றிக்கொடுக்கும் அளவிற்கு இந்த எழுத்துரு வளர்ந்து வந்துள்ளது.

இன்றைய நிலை– (https://speechnotes.co/)

’வண்டி ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடம் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்பார்கள் மூதாதையர்கள். அதுபோல 1980 – ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழில் எழுத்துரு உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லாமல் இருந்தது. பலரின் கூட்டுமுயற்சி, தமிழ் ஆர்வம் இதனால் 1982 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2015 ஆண்டு வரை பல்வேறு வகையான எழுத்துரு தோன்றி தமிழ் அன்னைக்குப் பெருமை சேர்த்தது.  இன்று இந்தத் தமிழ் எழுத்துரு நல்ல வளர்ச்சிப் பெற்று நாம் கணினித்திரையில் பேசினாலே தமிழில் தட்டச்சு செய்து நமக்கு வழங்கும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இன்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.  நான் 2005-ல்  ஏன் நாம் பேசினால் அது தட்டச்சு செய்து கொடுக்காதா? என்று பலமுறை நினைத்தது உண்டும். ஆனால் அது இவ்வளவு விரைவாக நமக்குக் கிடைக்கும் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.

இந்த இணையப் பக்கத்தில் உலக மொழிகள் எதுவாக இருந்தாலும் பேசினால் உரையாக வழங்கும் செயலிகள் உள்ளன. நாம் எந்த மொழி வேண்டுமோ அதனைத் தேர்வு செய்துகொண்டு ஒலிவாங்கியில் பேசினால் உடனே உரையாக வழங்கு முறை இதில் உள்ளன. இந்தச் செயலிமூலம் இனி தட்டச்சு செய்து ஒரு நூலை உருவாக்குவதைத் தாண்டி பேசினாலே ஒரு நூலை (100 பக்கம் கொண்ட) மூன்று மணிநேரத்தில் இலகுவாக முடித்துவிடலாம். முறை இதில் உள்ளன. இந்தச் செயலிமூலம் இனி தட்டச்சு செய்து ஒரு நூலை உருவாக்குவதைத் தாண்டி பேசினாலே ஒரு நூலை (100 பக்கம் கொண்ட) மூன்று மணிநேரத்தில் இலகுவாக முடித்துவிடலாம்.

நிறைவாக.

கணினித்தமிழின் வளர்ச்சியில் பல தடைகள், பல சங்கடங்கள், பல வெற்றிகள் இவைதான் தமிழ்க் கணினி கடந்த வந்த பாதைகள். அதனைக் கூற வார்த்தைகள் இல்லை. இருந்தாலும் இன்று தமிழ்க்கணினி தமிழகம் உள்ளிட்ட பிற நாடுகளில் நல்ல வளர்ச்சிபெற்று வளந்து வந்துகொண்டுகின்றன. அந்த வகையில் தமிழ் தட்டச்சு மென்பொருள்கள் இன்று பல்கிப்பெருகி வளர்ந்து வந்துள்ளதை, நாம் அனைவரும் வரவேற்க வேண்டிய ஒன்றுதான். கலாநிதி சீனிவாசன் அவர்களால் தொடங்கப்பட்ட இந்தத் தமிழ் எழுத்துரு படிப்படியாக வளர்ந்து இன்று பேசினாலே உரையாகக் கொடுக்கும் அளவிற்குத் தமிழ்மொழி வளர்ந்துள்ளது. நாங்கள் (கணினித்தமிழ் ஆர்வளர்கள்) நினைத்துப்பார்க்காத வகையில் இன்று கணினித்தமிழ் வளர்ந்து வந்துள்ளதை நாம் வரவேற்போம். பயன்படுத்துவோம்.

”சென்றிடுவீர் எட்டுத் திக்கும்  கலை

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”.  என்றார் பாரதியார். ஆனால் இன்று,
’பிறநாட்டுத் தொழில்நுட்ப உத்திகளை
தமிழ்மொழியில் புகுத்த வேண்டும்
இறவாத புகழுடைய புது     தமிழ் மென்பொருள்கள்
தமிழ் மொழியில் புதிதாக உருவாக்க வேண்டும்’.

ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள் மற்றும் இணையதளங்கள்:

  1. முனைவர் துரை. மணிகண்டன். ’இணையமும் தம்ழும்’, நல்நிலம் பதிப்பகம், சென்னை-2008
  2. முனைவர் துரை.மணிகண்டன், ’தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்’, கமலினி பதிப்பகம், தஞ்சாவூர். 2012
  3. முனைவர் மு.பொன்னவைக்கோ, ’இணையத் தமிழ் வராலாறு’, பாரதிதாசன் பல்கலைக்கழக வெளியீடு.,திருச்சிராப்பள்ளி- 2010
  4. முனைவர் இராதா செல்லப்பன், ’தமிழும் கணினியும்’ கவிதை அமுதம் வெளியீடு, திருச்சிராப்பள்ளி. 2011.
  5. https://speechnotes.co/
  6. http://software.nhm.in/products/writer
  7. https://www.azhagi.com/
  8. https://www.wikipedia.org/
  9. https://ta.wikipedia.org  
  10. http://manikandanvanathi.blogspot.com/

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!