இத்தாலி Euro 2020 Final சாம்பியன் two-time EURO champions
Euro 2020 Final Highlights: Italy Beat England 1-1 (3-2) on Penalties

ஐரோப்பிய கால்பந்து இறுதிப்போட்டி- இத்தாலி அணி champions
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் EURO 2020 போட்டி கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் இத்தாலி- இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
ஆட்டத்தில் முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கோலுடன் முன்னிலை வகித்தது. அதில் இங்கிலாந்து அணி வீரர் லூக் ஷாவின் கோல் 1 நிமிடம் 57 வது வினாடியில் அடிக்கப்பட்டது. இது EURO 2020 சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் அடித்த வேகமான கோல் ஆகும்.

இதனைத்தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் லியோனர்டோ போனுக்சி கோல்
அடித்தார் இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது.
இதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட அதிகப்படியான நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் Penalty kick அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இத்தாலி அணி 3 கோல்களும், இங்கிலாந்து அணி 2 கோல்களும் அடித்தன. இதன்அடிப்படையில் இத்தாலி அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக champions பட்டத்தை கைப்பற்றியது.
முன்னதாக 4 முறை உலக champions இத்தாலி அணி இதற்கு முன்பு ஒரே ஒரு முறை யூரோ கோப்பையை (1968-ம் ஆண்டு) வென்றுள்ளது. களத்தில் அதிரடியான தாக்குதல் பாணியை கையாளுவதில் கில்லாடியான இத்தாலி அணி இந்த தொடரில் மட்டும் 12 கோல்களை போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
*Photo UEFA on Twitter