இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலையில் கைதான 6 பேர் விடுதலை
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை இருந்து இன்று(11) 30 ஆண்டுகளுக்குப் பின்பு 6 பேரை விடுதலை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது

இதன்படி, நளினி, ஜெயக்குமார், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சுதேந்திரராஜா, ஸ்ரீஹரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கடந்த மே 18ஆம் தேதி மற்றொரு கைதி பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு அளித்த தீர்ப்பின்படி, தற்போது அந்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த ஆறு பேரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது