NationNews

இந்திய அமைச்சர் முருகன்,அண்ணாமலை தலைமையில் உயர்மட்ட குழு யாழ் வந்தது!

இந்தியாவின் மீன்வள மத்திய இணைஅமைச்சர் அடங்கிய குழுவினர் பலாலி சர்வதேச விமானத்தை வந்தடைந்தனர்.

யாழ் கலாச்சார நிலையம் நாளை திறப்பு

இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன், மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின் உயர்மட்ட குழு பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

யாழ் இந்திய துணைத் தூதுவர், சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன், கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையிலான அதிகாரிகள் இந்திய உயர்மட்ட குழுவினை மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இந்திய அரசின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ள இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன், காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபட்டார்..

நாளைய தினம் இந்திய அரசின் நிதி பங்களிப்பில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள மன்னார் திருக்கேதீஸ்வரம்ஆலயத்திற்கு செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

__________________________________________________________________________________________________________________

யாழ். கலாச்சார மத்திய நிலையம் -Foreign Secretary Harsh Vardhan Shringla visited Jaffna Cultural Centre 03/10/2021

Foreign Secretary Harsh Vardhan Shringla visited Jaffna Cultural Centre
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!