இந்திய படைக்கு எதிராக அன்னைபூபதி மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த நாள் இன்று
இந்திய படைக்கு எதிராக அன்னைபூபதி
உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த நாள் மார்ச் 19, 1988 – இறப்பு ஏப்ரல் 19, 1988 உண்ணாவிரதம் நாட்கள் 31
பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவையாவன:
1:உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும்.
2:புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.