இந்திய மீனவர்கள் 20 பேர் நடுக்கடலில் இலங்கை கடற்படையால் கைது படகுகள் பறிமுதல்
கச்சத்தீவு அருகே ராமேஸ்வர மீனவர்கள் 20 பேர் நடுக்கடலில் இலங்கை கடற்படையால் கைது படகுகள் பறிமுதல்.
UNHRC இல் இலங்கையை மறைமுகமாக ஆதரித்த மோடி அரசுக்கு இலங்கை தந்திருக்கும் பரிசா இது? கலாநிதி இரவிக்குமார் MP தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
ராமேஸ்வர மீனவர்கள் 20 பேர் 2 விசைப் படகுகளுடன் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், எல்லை தாண்டியதாக மீனவர்களை நடுக்கடலில் சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறிய நிலையில், தமிழக மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 20 மீனவர்களும் தலைமன்னார் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.