NationNews

இன்று, அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் உதவி

இன்று, அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் தொழிலாளர்களை ஊதியத்தில் வைத்திருக்க உதவுவதன் மூலம் வேலைகளைச் சேமிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை அறிவித்தது

Prime Minister announces additional support for businesses to help save Canadian jobs

May 11, 2020
Ottawa, Ontario

COVID-19 has altered the way we live our lives and, every day, Canadians are facing new challenges during this crisis. As more people worry about paying their bills and caring for their loved ones, the Government of Canada is continuing to take unprecedented action to help protect middle class jobs, and the health and safety of all Canadians.  

The Prime Minister, Justin Trudeau, today announced new measures to support businesses so they can keep their workers on the payroll and weather this pandemic.

Millions of Canadians pay their bills and feed their families by working for large and medium-sized businesses. The government will offer support to those businesses affected by COVID-19 based on a number of conditions. To help protect Canadian middle class jobs, and safeguard our economy, the Government of Canada will :

  • Establish a Large Employer Emergency Financing Facility (LEEFF) to provide bridge financing to Canada’s largest employers, whose needs during the pandemic are not being met through conventional financing, in order to keep their operations going. The objective of this support is to help protect Canadian jobs, help Canadian businesses weather the current economic downturn, and avoid bankruptcies of otherwise viable firms where possible. This support will not be used to resolve insolvencies or restructure firms, nor will it provide financing to companies that otherwise have the capacity to manage through the crisis. The additional liquidity provided through LEEFF will allow Canada’s largest businesses and their suppliers to remain active during this difficult time, and position them for a rapid economic recovery.
  • Use key guiding principles in providing support through the LEEFF, including:
    • Protection of taxpayers and workers: Companies seeking support must demonstrate how they intend to preserve employment and maintain investment activities. Recipients will need to commit to respect collective bargaining agreements and protect workers’ pensions. The LEEFF program will require strict limits to dividends, share buy-backs, and executive pay. In considering a company’s eligibility to assistance under the LEEFF program, an assessment may be made of its employment, tax, and economic activity in Canada, as well as its international organizational structure and financing arrangements. The program will not be available to companies that have been convicted of tax evasion. In addition, recipient companies would be required to commit to publish annual climate-related disclosure reports consistent with the Financial Stability Board’s Task Force on Climate-related Financial Disclosures, including how their future operations will support environmental sustainability and national climate goals.
    • Fairness: To ensure support across the Canadian economy, the financing is intended to be applicable to all eligible sectors in a consistent manner.
    • Timeliness: To ensure timely support, the LEEFF program will apply a standard set of economic terms and conditions.
  • Expand the Business Credit Availability Program (BCAP) to mid-sized companies with larger financing needs. Support for mid-market businesses will include loans of up to $60 million per company, and guarantees of up to $80 million. Through the BCAP, Export Development Canada (EDC) and the Business Development Bank of Canada (BDC) will work with private sector lenders to support access to capital for Canadian businesses in all sectors and regions.
  • Continue to provide financing to businesses through Farm Credit Canada, the BDC, and EDC, including through the Canada Account. This will ensure the government is able to respond to a wide range of financing needs, including for some large employers facing higher risks, with stricter terms in order to adequately protect taxpayers.

These measures are part of the Government of Canada’s COVID-19 Economic Response Plan, which has helped protect Canadian jobs, and committed billions in support to Canadians and businesses facing hardship as a result of the pandemic. This includes an extension on the Canada Emergency Wage Subsidy, which allows businesses to keep workers on the payroll. The government will continue to monitor and respond to the wide-ranging impacts of COVID-19, and take additional actions as needed to protect the health and safety of Canadians and stabilize the economy.

உடனடி வெளியீட்டுக்காக

மே 11, 2020

கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை

கோவிட்-19 உலகத் தொற்றுநோயின் ஆரம்பத்தில் இருந்தே, கனேடிய அரசின் பதில் நடவடிக்கை மூன்று அடிப்படை நோக்கங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றில் முதலாவது கனேடியர்களைப் பாதுகாப்பாகப் பேணுவது. அத்துடன், மிகவும் நலிவடைந்தோரைப் பாதுகாப்பதற்குச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்வது.

இரண்டாவது நோக்கம் உலகத் தொற்றுநோயின் மிகவும் மோசமான பாதிப்பில் இருந்து தனிநபர்களையும், தொழிலாளர்களையும், குடும்பங்களையும் பாதுகாப்பது. கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு (Canada Emergency Response Benefit) போன்ற திட்டங்களின் மூலமாகவும், இம்மாதத்திற்கான கனடா சிறுவர் உதவிக் கொடுப்பனவை (Canada Child Benefit) அதிகரிப்பதன் மூலமும், ஜீஎஸ்ரி வரி மீளளிப்பை அதிகரிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலமும் இது நிறைவேற்றப்படுகிறது. மூன்றாவது, இந்த நெருக்கடி முடிந்த பின்னர் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைவதை உறுதி செய்வதற்காக கனேடியர்களின் வேலைவாய்ப்புக்களைப் பாதுகாப்பதற்காக, லாப நோக்கமுள்ள நிறுவனங்கள், லாப நோக்கம் அற்ற நிறுவனங்கள், தொண்டு அமைப்புக்கள் என்பவற்றையும் உள்ளடக்கிய கனேடிய வணிக நிறுவனங்களுக்கு உதவி வழங்குகிறது.

பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, பல மில்லியன் கனேடியர்களுக்குக் கூட்டாக வேலைவாய்ப்பை வழங்கும், கோவிட்-19 உலகத் தொற்றுநோயால் முன்னொருபோதும் ஏற்படாத இழப்புகளைச் சந்திக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவான அடுத்த கட்ட உதவி குறித்து இன்று அறிவித்தார்.

சிறுவணிக நிறுவனங்கள் நொடித்துப் போவதைத் தடுப்பதற்காகவும், அதிக பணம் தேவைப்படும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு உதவியாகவும் உருவாக்கப்பட்ட வணிகக் கடன் வசதித் திட்டத்தைக் (Business Credit Availability Program) கனேடிய அரசு விரிவாக்கம் செய்யவுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்துத் தொழிற்துறைகளையும் சேர்ந்த கனேடிய நிறுவனங்களுக்கும் தனியார்துறை கடன் வழங்குனர்களிடம் இருந்து பல பத்து மில்லியன் டொலர்கள் கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்குக் கனடா ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனமும் (Export Development Canada) கனேடிய வணிக மேம்பாட்டு வங்கியும் (Business Development Bank of Canada) செயலாற்றவுள்ளன.

இதேவேளை, மிகப் பெருமளவானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் வேறு வழிகளில் நிதி திரட்ட முடியாதிருந்தால், அவை நெருக்கடி காலத்தைச் சமாளிப்பதற்காக பெருமளவு வேலைவாய்ப்பு வழங்குவோருக்கான அவசர கடன் திட்டம் (Large Employer Emergency Financing Facility (LEEFF)) உருவாக்கப்படும்.

பல அடிப்படைக் கொள்கைகளுக்கு அமைவாக இந்த உதவி வழங்கப்படும். முதலாவது வங்குறோத்து நிலைமையைத் தவிர்ப்பது: பாரிய நிறுவனங்கள் நிலைத்து நிற்பதை உறுதி செய்து, அவை வழங்கும் பல மில்லியன் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பது. இரண்டாவது நியாயமான ஒரு பொறிமுறையை உருவாக்குவதன் மூலம் – கனடா முழுவதும் அனைத்து மாகாணங்களிலும், பிராந்தியங்களிலும் உள்ள அனைத்துத் தொழிற்துறைகளையும் சேர்ந்த நிறுவனங்களுக்கும் சீரான நிதியுதவி கிடைப்பது உறுதி செய்யப்படும். மிக முக்கியமாகப் பணியாளர்களைப் பாதுகாப்பதுடன் நிறுவனங்கள் பொறுப்புக்கூறுவதையும் அரசு உறுதிப்படுத்தும்.

இந்த உதவியைப் பெறும் நிறுவனங்கள் சில கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டியிருக்கும். வேலைவாய்ப்புகளையும் முதலீடுகளையும் பேணுதல், கூட்டுப்பேர ஒப்பந்தங்களையும், ஓய்வூதிய கடப்பாடுகளையும் மதித்து நடத்தல், சுற்றுச்சூழல், காலநிலை என்பன தொடர்பான கடப்பாடுகள் போன்றன இவற்றில் அடங்கியிருக்கும். முக்கியமாக பங்குலாபம், பங்;குகளை நிறுவனமே மீண்டும் கொள்வனவு செய்தல், உயரதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் என்பவற்றுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் இருக்கும். வரி தவிர்ப்பு, வரி ஏய்ப்பு ஆகியவற்றுக்கு எதிரான உறுதியான நடவடிக்கையாக, நிதி உதவிக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் அவற்றின் முழுமையான நிதிக் கட்டமைப்பு விபரங்களை வெளியிடவேண்டியிருக்கும்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!