இன்று கனடாவில் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அறிவிப்பு
தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக உருவாக்கிய உலகின் முதல் தேசிய பாராளுமன்றம் கனடாவாகும்
மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிப்பது தொடர்பான பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி புதன்கிழமை (18) இந்த பிரேரணையை முன்வைத்தார்
பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி 2016 ஆம் ஆண்டு மே 18 தனது உரையில் இன அழிப்பு நடந்தது என்பதையும் இலங்கை அரசாங்கத்தை இன்டர்நேஷனல் கோர்ட் ஆஃ ஜஸ்டிஸ் கொண்டு செல்ல வேண்டும் என்பதே கனடிய பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார் அதன் இணைப்பைக் கீழே காணலாம்

