ArticlesWorld

இயற்கை முறையிலான முருங்கை, முருங்கைசார் உற்பத்திப்

இயற்கை முறையிலான முருங்கை, முருங்கைசார் உற்பத்திப் பொருட்களுக்கான தேவை, கேள்வி என்பன உலகச் சந்தையில் அதிகரித்துள்ளன.

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் “முருங்கை வளர்ப்பு, அதன் பெறுமதிசேர் உற்பத்திகளை எவ்வாறு மேற்கொள்ளலாம்” என்பது குறித்த அறிவூட்டல் நிகழ்வு, இணையவழியூடாக வடக்கு-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறைந்தளவு பயிர்ப் பாதுகாப்பு முறைமை மற்றும் இழப்பீடுகள் குறைந்த இம் முருங்கை உற்பத்தியூடாகப், பல்வேறு வழிகளில் பாதிப்புக்குள்ளான வறுமை நிலையில் உள்ள மக்களை இவ் உற்பத்தியில் ஈடுபாடு கொள்ள வைப்பதன் மூலம், அம்மக்களுக்கான நிலையான வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.
எனவே இவ் இணையவழிக் கலந்துரையாடலில், அனைவரையும்
பங்குகொண்டு இத்திட்டத்துக்கு வலுச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!