World

இரண்டாம் உலக யுத்தத்திற்கான காரணங்களும், விளைவுகளும்

இரண்டாம் உலக யுத்தத்திற்கான காரணங்களும், விளைவுகளு By:சோசலிச வலைத்தளம்

இந்த உரையின் பிரதான கவனம் இரண்டாம் உலக போரைத் தூண்டிவிட்ட பிரத்தியேகமான முரண்பாடுகள் மீதோ மற்றும் சம்பவங்களின் மீதோ இருக்காது, மாறாக அந்த போருக்கான மிகப் பொதுவான காரணங்களின் மீதே கவனம்செலுத்தும்.

1939 மற்றும் 1945க்கு இடையே பாரியளவில் பிரளயம் கட்டவிழ்ந்திருந்த நிலையில், போருக்கான காரணங்களை பிரதானமாக, அவற்றின் பரந்த வரலாற்று உள்ளடக்கத்திற்கு அப்பாற்பட்டு டான்சிக் (Danzig) பகுதி பிரச்சினை போன்ற மோதல்களுக்கு இட்டுச்சென்ற இராஜதந்திரரீதியிலான முரண்பாடுகளுக்குள் தேட முனைவது என்பது முற்றிலும் பொருளற்றதாகவும், மேலோட்டமானதாகும் இருக்கும்.

இரண்டாம் உலகப் போரின் காரணங்களைக் குறித்த எந்தவொரு கவனத்திற்கெடுப்பும், 1914 மற்றும் 1918க்கு இடையே நிகழ்ந்த முதல் உலகளாவிய இராணுவ மோதல் நடந்து வெறும் இருப்பத்தைந்து ஆண்டுகளில், 1939 மற்றும் 1945க்கு இடையிலான உலகளாவிய இராணுவ மோதலில் இருந்து வெளிப்பட்டு வந்திருந்தது என்ற உண்மையிலிருந்து தொடங்க வேண்டும். முதலாம் உலக போருக்கும் இரண்டாம் உலக போருக்கும் இடையே வெறும் இருப்பத்தியொரு ஆண்டுகள் மட்டுமே கடந்திருந்தன. இதை வேறொரு விதத்தில் பார்ப்பதென்றால், வெறும் முப்பத்தியொரு ஆண்டுகால இடைவெளியில், இரண்டு பேரழிவுகரமான உலகளாவிய போர்கள் நடாத்தப்பட்டிருந்தன.

இதையொரு சமகாலத்திய முன்னோக்கில் நிறுத்தினால், 1914 மற்றும் 1945க்கு இடையிலான காலஇடைவெளியானது, கார்டர் நிர்வாகத்தினது மத்திய பகுதியான 1978க்கும் மற்றும் 2009க்கும் இடையிலான அதே காலஅளவாகும். வரலாற்று கண்ணோட்டத்தின் இந்த அர்த்தத்தில் —வரலாற்று காலகட்டத்திற்கேற்ப அவசியமான மாற்றங்களோடு— 1960இல் பிறந்த ஒருவர் 1978இல் பதினெட்டு வயதில் இருந்திருப்பார், அதாவது, ஒரு போரில் சண்டையிடுவதற்கு இழுக்கப்படக்கூடிய வயதில் இருந்திருப்பார் எனக் கொள்ளலாம். முதலாம் உலக போரில் பதினெட்டு வயதில் சண்டையில் ஈடுபட்ட ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, போர் முடிகையில் உயிர் பிழைத்திருந்தால், வெறும் இருபத்தி-இரண்டு வயதில் இருந்திருப்பார். அந்த ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு இரண்டாம் உலக போர் தொடங்கியபோது வெறும் நாற்பத்தி-மூன்று வயதாகி இருக்கும் என்பதுடன், அப்போர் நிறைவடைந்த போது அவர் வெறும் நாற்பத்தி-ஒன்பது வயதில் இருந்திருப்பார்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!