இலங்கைப் TNA வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க மாட்டோம்?
இலங்கைப் பாராளுமன்றத்தில் இன்று (22) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க மாட்டோம்? என்று M.A. Sumanthiran
“இப்படிப்பட்ட நேரத்தில், இந்த நாட்டைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க, இந்த வரவு-செலவு திட்டத்தின் மூலம் ஒரு வேலைத்திட்டம் வரும் என்று எதிர்பார்த்திருப்போம், அது இல்லை, எனவே இந்த வரவு-செலவு திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்! ஆனால் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் நாங்கள் இன்று இவ் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதில்லை என்ற முடிவை எடுத்த்துள்ளோம். அதற்குக் காரணம் கடந்த சில நாட்களாக ஜனாதிபதி அவர்கள் நீண்டகாலமாக நிலவும் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகத் திரும்பத் திரும்பக் கூறிவருகிறார் – எமக்கு சந்தேகம் இருந்தாலும், நாம் அதை நம்பாத போதிலும், ‘இதை நான் தீர்க்க வேண்டும், வாருங்கள் உட்கார்ந்து பேசுவோம்’ என்று கூறும் ஜனாதிபதியை எதிர்ப்பதற்காக நாங்கள் குற்றம் சாட்டப்பட விரும்பவில்லை. அதனால்தான், இன்று நாங்கள் இந்த வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க மாட்டோம்.”
Photo facebook