இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவிப்பு
75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு மற்றும் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் பேரணிகள் தமிழர் வாழும் பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்








தமிழர்களுக்கு ஏமாற்றம் இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் காலி முகத்திடலில் பெப்ரவரி 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
சுதந்திர இலங்கையில் 75 வருட காலமாக தமிழர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்னைகளுக்கு தீர்வை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலக்கெடு இன்று (4) தினமாகும்.
நாட்டின் சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர் பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் மற்றும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி உறுதி வழங்கியிருந்தார்.
2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி இவ்வாறு உறுதி வழங்கிய நிலையில், வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதாகவும் கூறியிருந்தார் ஆனால் இதுவரை எதுவுமே நடக்கவில்லை இப்போது அவருக்கு இரண்டு வருடங்கள் தேவையாம்