NationNews

இலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்

இவரின் உரையில் நான் 1977ம் ஆண்டு தான் முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான சந்தர்ப்பத்திலிருந்து இனப்பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அது இன்று வரை வெற்றியளிக்கவில்லை.இம்முறை இனப்பிரச்னைக்கு தீர்வொன்றை நிச்சயம் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக ஆர்.சம்பந்தனும், நானும் 1977ம் ஆண்டு ஒரே சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்றத்திற்கு தெரிவானதாக கூறிய அவர் “தம் இருவருக்கும் அன்று முதல் இன்று வரை கனவொன்று இருப்பதாகவும்” குறிப்பிட்டார்

இன்றைய முக்கிய செய்தி ஜனாதிபதி மாளிகையில் கடந்த ஆண்டு ஜூலை 9ம் திகதி மீட்கப்பட்ட 1 கோடி 78 லட்சத்தை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டா விடுத்த கோரிக்கையை கோட்டை நீதிமன்றம் நிராகரித்தது.

இலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம். ஆரம்ப உரை தமிழ் மொழிபெயர்ப்பு கீழே காணலாம்

இந்த ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (2023.02.08) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கூட்டத்தொடரை வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்ததை அடுத்து அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் மு.ப 10.00 மணியளவில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றினார்.

புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வை எளிமையான வைபவமாக நடத்துவதற்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவருடைய பாரியாரின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் வருகை இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க மற்றும் முதற்பெண்மணியின் வருகை இடம்பெற்றது.

இதன்போது சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்றனர்.

அதனையடுத்து, படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல கௌரவ சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன்போது, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவியர் ஜயமங்கல கீதம் இசைத்தனர்.

அதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜனாதிபதி அவர்கள் மு.ப 9.55 மணிவரை அங்கிருந்து, பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் பிரவேசித்தனர்.

சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்ட ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனத்தை முன்வைத்தார். அதனையடுத்து 2023.02.09 ஆம் திகதி மு.ப. 9.30 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

Photo:PMD

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!