NationNewsWorld

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்…!

Getting your Trinity Audio player ready...

அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பொது அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

03ஆம் திகதி பொதுமக்கள் வீதிகளில் இறங்கத் தயாராகிவரும் நிலையில். இந்த பொது அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அவசர நிலை என்றால் என்ன?

அவசர நிலை அமுலுக்கு வந்தால் ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படும். கூடவே பொலிசாருக்கு அதிகாரங்கள் அதிகரிக்கும்.

குறிப்பாக தேவைப்படும் ஒருவரை நீதிமன்ற உத்தரவின்றியே கைதுசெய்து குறிப்பிட்டகாலம் வரை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யாமல் பொலிசார் தடுத்துவைக்க முடியும்.

தேவைப்படும் இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவும் பொலிசாருக்கு அதிகாரம் இருக்கும்.

பாதுகாப்பைப் பலப்படுத்த இராணுவத்தினரும் ஏனைய பாதுகாப்புப் படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்படலாம்.

தேவையான இடங்களில் திடீர் சோதனைச் சாவடிகளைக்கூட அமைக்கலாம்.

பொது இடங்களில் ஆட்கள் கூடுவது மட்டுப்படுத்தப்படும். இது ஆர்ப்பாட்டங்கள், கலவரங்கள் உருவாவதைத தடுக்க பயன்படுத்தப்படும்.

வன்முறைகள் ஏற்படும் போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் பொலிசாருக்கு அனுமதி வழங்கப்படலாம்.

தேவையான இடங்களில் ஊரடங்குச் சட்டங்களை பிறப்பிக்க முடியும்.

ஊடகங்கள் மீது கட்டுப்பாடு கொண்டுவரமுடியும். தேவைப்படின் தணிக்கைகள் அமுல்படுத்தப்படும்.

*செய்தி: செல்வா

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!