இலங்கையில் கொரோன வைரஸ் தாக்குதலை விட பருப்பின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகின்றது
In Sri Lanka, from 3 January 2020 to 6:16pm CEST, 3 September 2021, there have been 447,757 confirmed cases of COVID-19 with 9,604 deaths, reported to WHO. As of 31 August 2021, a total of 20,638,181 vaccine doses have been administered.
இலங்கையில் தினசரி 200 மேல் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன . வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மாத இறுதியில் நாடு தழுவிய அளவில் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில் தொடர்ந்து அதிகரிதூ தினசரி புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பு இதுவரை 9 ஆயிரத்து தாண்டியுள்ளது கருத்தில் கொண்டு, வருகிற 13ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ.85 வரை விற்கக் கூடிய ஒரு கிலோ அரிசி விலை ரூ.150க்கு மேல் உயர்ந்துள்ளது. ரூ.85க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ சீனியின் தற்போது ரூ.260க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ உளுந்தம் பருப்பு ரூ.1150க்கும், ஒரு கிலோ பச்சைப்பயிறு ரூ.850க்கும் விற்கபப்டுகிறது. ஒரு கிலோ மஞ்சள் ரூ.7500க்கு விற்கப்படுகிறது
இந்த நிலையில் பொருளாதார அவசர நிலையை இலங்கை அரசு அறிவித்துள்ளார். அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த அத்தியாவசிய பண்டங்களுக்கான ஒழுங்குமுறை ஆணையராக ராணுவ அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.