இலங்கையில் 48 மணித்தியால மின் துண்டிப்பை ஏற்படுத்தப் போவதாக மிரட்டல்
நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறு தெரிவித்து பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.