இலங்கை ஜனாதிபதி போட்டியில் மூவர்
இலங்கை ஜனாதிபதி போட்டியில் மூவர் மட்டுமே போட்டியிடுகின்றார்கள்
1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இல. ஜனாதிபதித் தோ்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்துக்கமைய அடுத்துவரும் ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பெயரை முன்மொழிந்தார் தினேஷ் – வழிமொழிந்தார் மனுச நாணயக்கார.
,டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) பெயரை முன்மொழிந்தார் சஜித் – வழிமொழிந்தார் பீரிஸ் மற்றும் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பெயரை முன்மொழிந்தார் வஜித ஹேரத் – வழிமொழிந்தார் ஹரினி.ஆகிய உறுப்பினர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்தார். மற்றும் நாளைய (20) ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பு காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக சபையில் அறிவிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பு இரகசியமாக நடைபெறும். எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்