NationNews

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு

நாளைய (20) ஜனாதிபதி தெரிவுக்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக இதுவரை 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவதாக கூறியுள்ளனர். இதில் தமிழர் தரப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்குவதாக தமது டுவிட்டர் பக்கத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளன. இவருக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் கீழே காணலாம்
ஐக்கிய மக்கள் சக்தி – கூட்டணி – 50
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 10
ஶ்ரீலங்கா சுதந்திரகக்கட்சி – 09
சுயாதீன அணிகள் – 21
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 25

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இன்று (19) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Most powerful voice #peacefulprotest

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!