NationNewsநிகழ்வுகள்-Events

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த கோரி தமிழ் இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி அலுவலகத்திற்கு முன்பாக பேரணி-18 திகதி

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த கோரி தமிழ் இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி(Honourable Gary Anandasangaree, Minister of Crown–Indigenous Relations Canada) அலுவலகத்திற்கு முன்பாக பேரணி ஒன்று 18 திகதி நடைபெற உள்ளது அவர்களின் வேண்டுகோள் கீழே காணலாம்

Photo:Pweb

Rally in front of MP Gary Anandasangaree office. Tamil youth from Scarborough will deliver a letter signed by nearly 300 Tamil community members calling on MP Anandasangaree to break his silence and call for an immediate and permanent ceasefire and an end to the siege on Gaza.

DATE: Monday, Dec. 18th

TIME: 7:00pm-8:00pm

LOCATION: 3600 Ellesmere Road Unit #3, Scarborough

SPEAKERS: Youth from Tamils4Palestine, local Scarborough Rouge Park resident Beyhan Farhadi, Labour4Palestine activist and Scarborough Rouge Park resident Kingsley Kwok, more TBA.

Open Letter to Canadian minister Gary Anandasangaree from Tamils Callingfor an End to the Genocide in Palestine : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf7PigCSaTlLjuhhsoNHg2GMI7NprV6Y3S8hKG-1za_WoPL-Q/viewform

கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி

காசாவில் இனப்படுகொலையை தடுக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யாமல் இருப்பது எங்களுக்கு மனவேதனை அளிக்கிறது. 10,000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்து வருகிறது.

காசாவில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளாலும், போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுவதை தவிர்க்கும் கனேடிய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையாலும் கனடாவில் உள்ள தமிழ் சமூகம் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இச் செயற்பாடு 2009 ஆம் ஆண்டின் எதிரொலியாகவே உள்ளது. ஆனால் இப்போது அவசரமாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.

காசாவில் மனித உயிர்களைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்பதால் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்குமாறு தமிழ்ச் சமூகமாகிய நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு கனடா முழுவதும் தமிழர்கள் தமிழீழக் கொடியை ஏந்தியதற்காக “பயங்கரவாதிகள்” என்று அழைக்கப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபை “இரத்த ஆறு” என்று எச்சரித்தும் கூட கனேடிய அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகளையும் தமிழ் சமூகத்தின் எதிர்ப்புத் ஆர்ப்பாட்டங்களையும் கண்டிப்பதிலேயே அதிக கவனத்தைச் செலவிட்டனர்,

தமிழ் மக்கள் கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையை தடுத்து நிறுத்தியதை கனேடிய அரசாங்கம் விமர்சித்து அன்று போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்தது. இன்று, பாலஸ்தீனியர்களின் வாழ்வு, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடத்தும் போராட்டங்களை “ஹமாஸ் சார்பு” பேரணிகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஹமாஸால் நடத்தப்பட்ட குடிமக்கள் கொலையை உடனடியாகக் கண்டனம் செய்யும் கனேடிய அரசியல்வாதிகள், பொதுமக்கள் மீதான உணவு, தண்ணீர் தடை, இணையத் தடை, மருத்துவமனைகள் மீதான இஸ்ரேல் அரசின் குண்டுத் தாக்குதல் குறித்து மௌனமாக உள்ளனர்.

இலங்கை அரசு செய்த தமிழ் இனப்படுகொலைகளுக்கு அன்று இஸ்ரேல் உடந்தையாக இருந்தது. இலங்கைக்கு விற்கப்பட்ட இஸ்ரேலிய ஆயுதங்கள் மூலம் தமிழர் படுகொலைகள் அன்று தொடர்ந்தன. இலங்கை அரசாங்கத்தால் இஸ்ரேலிய தயாரிப்பான கிபிர் விமானங்கள் மூலம் செஞ்சோலை சிறுமிகள் காப்பகத்தின் மீது குண்டு வீசப்பட்டது.

எனவே பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இழைத்துக்கொண்டிருக்கும் போர்க்குற்றங்களுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழ் மக்களாகிய நாங்கள் உங்களுக்கு அவசர அழைப்பு விடுகின்றோம்.

இன்றைய அரசியல்வாதிகள் தமிழ் இனப்படுகொலையையும் முள்ளிவாய்க்கால் படுகொலையையும் அங்கீகரிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை.. 2019 ஆம் ஆண்டு முதல், மே 18 ஆம் திகதி தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2021 இல், ஒன்ராறியோ மாகாணம் “தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்” என்பதை சட்டமாக அமுல்ப்படுத்தியது.

இவ்வருடம் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுஷ்டித்த போது, தமிழர்கள் தாயகத்தில் சுயநிர்ணய உரிமைக்கான அடிப்படை உரிமை தமிழர்களுக்கு உள்ளது என நீங்கள் கூறியிருந்தீர்கள். பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களின் தாயகத்தில் சுயநிர்ணய உரிமை உண்டு. காசாவில் இப்போது நடக்கும் இனப்படுகொலைக்கும் தமிழர்களாகிய எமது பிரச்சினைக்கும்இடையே உள்ள தெளிவான தொடர்புகளை தமிழ்ச் சமூகம் நன்கு விளங்கிக் கொண்டுள்ளது..

தமிழ் சமூகமாகிய நாங்கள் உங்களுக்கு பின்வரும் வேண்டுகோள்களை முன்வைக்கின்றோம்:

  1. உடனடியான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து காசா மீதான குண்டுத்தாக்குதல்களை நிறுத்துதல்.
  2. அவசர மருத்துவ உதவி, நிவாரண முயற்சிகளை அனுமதிக்க காசா மீதான தடையை நீக்குதல்
  3. இஸ்ரேலின் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் பாலஸ்தீனிய நிலத்தின் காலனித்துவம் ஆகியவை தொடர்பாக கனடா கடைப்பிடிக்கும் அசமந்தப்போக்கை மாற்றுதல்.

போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதில் உங்கள் சக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.

பாலஸ்தீனிய இனப்படுகொலை நினைவு தினத்தை எதிர்காலத்தில் பிரகடனப்படுத்துவதை விடுத்து, மேலதிக தாமதமின்றி வரலாற்றின் சரியான பக்கத்தில் நின்று, மனிதாபிமானத்தை வெல்வதற்கான காத்திரமான தீர்மானங்களை எடுக்குமாறு நாம் உங்களை கைகூப்பி வேண்டிக்கொள்கின்றோம்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!