NationNewsTechnology

உலகை உலுக்கிய Microsoft IT சிக்கல். பாதித்த Cloud Computing Service

Microsoft suffers global outage உலகளாவிய பாரிய அளவில் IT சிக்கல் விமானங்கள் முதல் தரை வரை பாதித்த Cloud Computing Service

உலகளாவிய அளவில் பரந்த அளவில் இணையச் சேவைகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதோடு, அரச சேவைகள், வங்கிகள், பேரங்காடிகள், தொடர்பாடல் மற்றும் ஊடக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பிரதான விமான சேவைகள் டெல்டா, யுனைடெட் மற்றும் அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தொடர்பாடல் பிரச்சினை காரணமாக நேற்றுக் காலை தரையிறக்கப்பட்டன.

சிட்னி விமான நிலையத்தில் விமான தகவல் திரைகள் செயலிழந்ததோடு, வூல்வேர்த் மற்றும் கோல்ஸ் போன்ற பேரங்காடிகளில் சுயசேவை அமைப்புகள் தவறான செய்திகளை வெளியிட்டன. சிட்னி விமான நிலையத்தில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன், ஜெர்மனி மற்றும் மலேசிய விமான நிலையங்களிலும் சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் நெட்வேர்க் டென் போன்ற அவுஸ்திரேலிய ஒளிபரப்புக் சேவைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அவை குறிப்பிட்டுள்ளன. வங்கிகளில் ஆன்லைன் சேவைகள் மற்றும் சில பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த தொழில்நுட்பக் கோளாறு எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மைக்ரோசொப்ட் இயங்குதளத்திற்கும் இதற்கும் தொடர்பிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சேவைத் தடங்கல் குறித்துத் தங்களின் கருத்தை தெரிவித்த மைக்ரோசொப்ட், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கூறியுள்ளது. அமெரிக்காவில் கிளவுட் சேவைகளில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஆப்புகள் மற்றும் பிற சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!