ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாள்

போர் சூழல் நிலவிய யாழ்ப்பாணத்தில் இருந்து மயில்வாகனம் நிமலராஜன் பல செய்தி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்கி வந்தார். அவற்றுள் பிபிசியின் தமிழ், சிங்கள சேவைகளும், வீரகேசரி நாளேடு, ராவய நாளேடு என்பன முக்கியமானவையாகும்.
நிமலராஜன் யாழ்ப்பாணத்தில் இருந்து நடுநிலையான செய்திகளை வழங்கி வந்த வெகு சிலரில் ஒருவராவார்
இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி சூட்டினால் உயிர் துறந்தார்
https://cpj.org/2001/03/attacks-on-the-press-2000-sri-lanka/