ஒன்ராறியோ கொவிட்-19 பற்றிய தகவல்: மே 07
ஒன்ராறியோ கொவிட்-19 பற்றிய தகவல்: மே 07 வழங்கப்பட்டுள்ள முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமிடத்து, ஒன்ராறியோ அரசானது சில்லறை வணிக நிறுவனங்களை மீளவும் திறக்க அனுமதி வழங்கும். இவை தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:
மே 8ஆம் திகதி நள்ளிரவு 12:01 மணிக்குப் பின்னராக தோட்டப் பொருட்கள் மற்றும் நாற்றுப் பண்ணை விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் உள்ளே சென்று தமக்கு வேண்டிய பொருட்களை நுகரவும் அவற்றுக்கான கட்டணங்களைச் செலுத்தவும் அனுமதிக்கப்படுவர்.
Streamed live: CPAC மே 07 2020
மே 9ஆம் திகதி நள்ளிரவு 12:01 மணிக்குப் பின்னராக, கட்டடப்பொருட்கள், உபகரணப் பொருட்கள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான பொருட்கள் வினியோகிக்கும் வணிக நிலையங்கள் அவைகளின் வாடிக்கையாளர்களை கடைகளுக்குள் அனுமதிக்கவும் கொள்வனவுகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்படும்.
மே 11ஆம் திகதி நள்ளிரவு 12:01 மணி முதல், சாலையுடன்கூடிய நுழைவாயிலை அல்லது தனியான நுழைவாயிலை உடைய சில்லறை வணிக நிலையங்கள் அவைகளின் கடைகளுக்கு வெளியே மட்டும் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே ஒழுங்குசெய்த பொருட்களைப் பெற அல்லது கொடுக்க அனுமதி வழங்கப்படும்.
அத்துடன், அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகள் மற்றும் தொடர்மாடிக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை மீளத் தொடங்க அரசாங்கும் அனுமதி வழங்குகிறது.
விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர்.
ஸ்காபரோ – றூஜ் பார்க் (Scarborough—Rouge Park MPP Vijay Thanigasalam)