EntertainmentLatestNationNews

கனடாவின் தேசிய கொடி தினம்: 60ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்.

கனடாவின் தேசிய கொடி தினம் (National Flag Day) இன்று பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கனடிய தேசியக் கொடியான மெபில் இலைக் கொடியின் 60வது ஆண்டு நிறைவு ஆகிறது. 1965ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த கொடி, நாடு முழுவதும் ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக விளங்குகிறது.

இன்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒட்டாவாவில் உள்ள பார்லிமென்ட் ஹில்லில் தேசிய கொடி ஏற்றும் விழா, பள்ளிகள், சமூக மையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் சிறப்பான நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

உங்கள் வீடுகளில் ஒரு கனடிய கொடியை ஏற்றி ஒற்றுமையை காட்டுங்கள்

கனடியர்கள், இந்நாளில் தமது தேசிய அடையாளத்தையும், வரலாற்றையும் நினைவுகூர்ந்து கொடியை மரியாதை செலுத்துகின்றனர். இந்த ஆண்டு விழாவில், கடந்த 60 ஆண்டுகளில் கனடாவின் வளர்ச்சி மற்றும் கொடியின் முக்கியத்துவம் பற்றிய நிகழ்ச்சிகளும் வட்டார அளவிலான கொண்டாட்டங்களும் இடம்பெறுகின்றன.

“எங்கள் கொடி, எங்கள் அடையாளம், எங்கள் பெருமை!” – இந்த உணர்வுடன், கனடியர்கள் தேசிய கொடி தினத்தை உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.