Historical EventsNationNews

கனடாவில் அமையவுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி

Getting your Trinity Audio player ready...

இன்று முள்ளிவாய்க்காலில் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியின் மாதிரிவடிவத்தை கனடா ஒன்ராரியோ பிறம்ரன் நகரசபையில் இன்று உத்தியோக பூர்வமாகப் பிரகடனப் படுத்திய நாள். இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே தமிழ் இனப்படுகொலைக்கான நினைவாலயத்தை பிரம்ரன் மாநகரசபை உருவாக்க முன் வந்தமை கனடாவில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கின்றன. ஓட்டேரி மிகவும் பிரபலமான பூங்காவான செங்கூசி பூங்காவில் பிராம்ரன் நகரசபை இந்த நினைவாலயம் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கி தந்துள்ளது. கோடை காலத்தில் லட்சோப இலட்சம் மக்கள் கூடுகின்ற அழகிய பூங்கா இதுவாகும்

இந்த நினைவுச் சின்ன திட்ட வடிவமைப்பை மேயர் பற்றிக் பிறவுண் மற்றும் பிராம்ரன் நகரசபையின் பிராந்தியஉறுப்பினர்களான மார்டின், பாற் வொற்னி, ஜெவ் போமன், கிரகம் மெக்ரிகோர் ஆகியோர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.

இந்த நினைவாலய வடிவமைப்பு உலகின் பல நூற்றுக் கணக்கான மாதிரிவடிவங்களில் இருந்துபோட்டியடிப்படையில் தகுதியானதை தேர்வானதாக்கிய வடிவாகும்.

இந்த நினைவாலயம் 12 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்டதாக அமைய உள்ளது. உண்மையில் இதுதமிழரின் 12 உயிர்எழுத்துகளையும், 18 மெய்எழுத்துகளையும் உணர்த்தி நிற்கிற அழகிய தமிழின் அற்புதம். கார்திகை பூ வடிவமைப்பை மையமாக கொண்டு காலநிலை, மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு இதனை சிறப்பு கட்டிட நிபுணர் Ms. Bernia Ramic (from Bosnia) நேர்தியாக வடிவமைத்திருக்கிறார்.

உலகளாவிய தமிழ் மக்களின் பங்களிப்புடன் கட்டியெழப்பப்படும் இவ் தமிழ் இன அழிப்பு நினைவுத் தூபிக்கு உங்களனைவரின் நிதியுதவியினை அளித்து இதை கட்டியெழுப்புவோம். கீழே உள்ள பட்டனை அழுத்தி நன்கொடை செலுத்தலாம்
https://tamilgenocidememorial.org/donation/

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!