கனடாவில் இன்று இடம்பெறவுள்ள தைப்பொங்கல் – தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பங்கேற்கவுள்ளார்.
Virtual 2021 Tamil Heritage Month Celebration நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகும் January 21st,2021 Time: 7:00 PM EST
பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, சமஷ்டி லிபரல் கட்சி நாடாளுமன்றக் குழு, தைப்பொங்கல், தமிழ் மரபுத் திங்கள் ஆகியவற்றை முன்னிட்டு இணையத்தில் நடத்தும் வரவேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்
இணையத்தில் இந்த விழா இன்று, 2021 ஜனவரி 21 ஆந் திகதி, மாலை ஏழு மணிக்கு ஆரம்பமாகும்.
இதேவேளை கோவிட்-19 உலகத் தொற்றுநோய் வேளையில் தமிழ்க் கனேடிய முன்களப் பணியாளர்களும், அத்தியாவசிய பணியாளர்களும் ஆற்றும் பணிகளைக் கௌரவிக்கும் வகையில் இந்த விழா அமையும். இந்த இணைய வழிய நேரலை கொண்டாட்ட நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ஸ்கார்பாரோ ரூஜ் பார்க் தொகுதி MP ஹரி ஆனந்தசங்கரி செய்துள்ளார்.
இரவு 7 மணி முதல் இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு இங்கே காணலாம் or MP ஹரி ஆனந்தசங்கரியின் Facebook பக்கத்தில் https://www.facebook.com/garyforsrp
————————————–ஓட்டாவா: 2017ம் ஆண்டு முதல் கனடாவில் ஜனவரி மாதம் ‘தமிழ் மரபுத் திங்கள்’——————————————-
ஓட்டாவா: 2017ம் ஆண்டு முதல் கனடாவில் ஜனவரி மாதம் ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்று நாடு முழுவதும் கொண்டாடப்படும். இதற்கான மசோதா பாராளுமன்றத்துல் அக்டோபர் 5ம் தேதி அனைத்துக் கட்சியினரின் ஏகோபித்த ஆதரவு மூலம் நிறைவேறியது.