NewsWorld

கனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்

CTC immediately responded to the Tamil Nadu Chief Minister’s appeal and raised $15,000 from Canadian Tamils and sent it to CMPRF

தமிழகத்தில் கோவிட் – 19 பெருந் தொற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டமைக்காக, கனடியத் தமிழர் பேரவை தமிழக அரசை வாழ்த்துகிறது, பாராட்டுகிறது. 2021 மே மாதப் பிற்பகுதியில், கோவிட் -19 பெருந் தொற்றினால் ஒரு நாளைக்கு 35,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

மே 12, 2021 அன்று தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்ராலின் அவர்கள், மருத்துவமனைகளில் ஒக்சிசன் வசதிப் படுக்கைகளை அதிகரிப்பது, உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் வாயு ஆகியவற்றைத் தடையின்றி வழங்குதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், தடுப்பூசிகள் வாங்குதல் மற்றும் மிகவும் தேவையான மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக நிதியுதவி கோரி
வெளிப்படையான வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தார்.

தமிழக முதல்வரின் இந்த வேண்டுகோளை, உடனடியாக கவனத்திற் கொண்டு கனடியத் தமிழர்களிடமிருந்து 15,000 கனடிய டொலர்களை சேகரித்து, கனடியத் தமிழர் பேரவை தமிழக முதல்வரின் கோவிட் நிவாரண நிதித்திட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

தமிழக மாநில அரசின் முறையான மற்றும் உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், இப்பொழுது COVID-19 பெருந் தொற்றுப் பரவல் பாதிப்பு எண்ணிக்கையை 2000 க்கும் குறைவாகக் குறைத்துள்ளன.

இந்த உதவித் திட்டத்திற்காக நிதிப் பங்களித்த அனைத்து கனடிய தமிழ் உணர்வாளர்களுக்கும் கனடியத் தமிழர் பேரவை பெரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!