கனடியத் தமிழர் பேரவையின் ‘தமிழர் தெருவிழா 2020’ நிகழ்வு நேரடி ஒளிபரப்பை நீங்கள் The Tamil Journal ஊடாகவும் காணலாம்.
கனடியத் தமிழர் பேரவையால் (CTC) ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக நடாத்தப்பட்டு வரும் ‘தமிழர் தெருவிழா’ நிகழ்வு இவ்வாண்டு வித்தியாசமானதொரு முறையில் நடைபெறவிருக்கிறது. கோவிட்19 நோய்த் தொற்றினைத் தவிர்க்குமுகமாக இம்முறை இவ்வாண்டிற்கான 6வது
‘தெருவிழா 2020’ நிகழ்வானது இணையம் வழியாக கொண்டாடப்படவிருக்கிறது.
2வது நாள் தமிழர் தெருவிழா 2020 Tamil Fest 2020
ஞாயிற்றுக் கிழமை (30-08-2020) நிகழ்வுகள் காலை 10:30 மணி முதல் பிற்பகல் 2:30 வரை (இலங்கை இந்திய நேரம் மாலை 8:30 (pm)மணி தொடக்கம் 12 மணிவரை)
- இவ்வாண்டிற்கான சிறப்புப் பேச்சாளர்களாக இலங்கையிலிருந்து கம்பன் கழகத்தின் ‘கம்பவாரிதி’ ஜெயராஜ் அவர்களும் தமிழகத்திலிருந்து தமிழ்மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் வணக்கத்துக்குரிய ஜெகத் காஸ்பர் அடிகளார் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
- சனிக்கிழமை ‘மெகா ரியூனேர்ஸு’டைய இன்னிசை நிகழ்ச்சி பிற்பகல் 2:30வரை. *ஞாயிற்றுக்கிழமை ‘அக்னி இசைக்குழு’வின் இன்னிசை நிகழ்ச்சி பிற்பகல் 2:30 வரை.
- தமிழகத்திலிருந்து பின்னணிப் பாடகர்கள் மனோ, ஹரிசரண் ஆகியோருடன் ஈழத்துப்பாடகர்கள் ஜெயந்தன் கந்தப்பு, பிரதா கந்தப்பு மற்றும் கனடாவின் பாடகர்களான ‘சுப்பர் சிங்கர்’ புகழ் ஜெசிக்கா ஜூட் மற்றும் சின்மய் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
நம் The Tamil Journal ஊடாகவும் தமிழர் தெருவிழா 2020 நிகழ்வினை நேரடியாகக் கண்டு களியுங்கள்:
சனிக்கிழமை (29-08-2020) நிகழ்வுகள் காலை 11:00 மணி முதல் பிற்பகல் 2:30 வரை
ஞாயிற்றுக் கிழமை (30-08-2020) நிகழ்வுகள் காலை 11:00 மணி முதல் பிற்பகல் 2:30 வரை (இலங்கை இந்திய நேரம் மாலை 8:30 (pm)மணி தொடக்கம் 12 மணிவரை)
