கனடிய அரசு இலங்கை அதிகாரிகள் மீது பிறப்பித்துள்ள தடைகளைக் CTC வரவேற்கிறது
கனடியத் தமிழர் பேரவையால் விடுக்கப்பட்ட அறிக்கை
இன்று ஜனவரி 10, 2022, சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் (SEMA) கீழ் மனித உரிமை மீறல்களுக்காகப் இலங்கை அரசில் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த நான்கு இலங்கையர்கள் மீது கனடிய அரசு இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளது. SEMA சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,
ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க,
லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகிய நால்வரும் கனடாவில் சொத்துகளை வைத்திருக்கும் பட்சத்தில் அவற்றைக் கனடிய அரசு முடக்கும். மேலும் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவிற்குள் அவர்களை உள்நுழைய அனுமதிக்க முடியாது.
அத்துடன் கனடிய அரசினால் தடைக்கு உள்ளாக்கப்பட்ட இந்த நான்கு பேருடனும் கனடியர்கள் கனடா நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் எந்தச் சொத்து சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது. மேலும் கனடியர்கள் அவர்களுக்கு எவ்வித நிதியுதவிகளும் செய்ய முடியாது.
இலங்கையில் போர் முடிவடைந்து 13 ஆண்டுகளுக்குப் பின்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இலங்கையின் மீது எழுந்த நிலையில், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல், கனடியத் தமிழர் பேரவையானது இலங்கை இராணுவக் கட்டளைத் தலைமைகளுக்கு எதிரான தடைகளை விதிக்குமாறு பலமுறை கனடிய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், 2020 பெப்ரவரி 14 ஆம் திகதி இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை விதித்ததிலிருந்து அதற்கான வேண்டுகோளைக் கடுமையாகக் கோரி வந்திருக்கின்றது.
2019 ஆம் ஆண்டிலிருந்து பதவி வகித்துவந்த எல்லா வெளிவிவகார அமைச்சர்களுக்கும், கனடியத் தமிழர் பேரவை இலங்கை அரசு மீது இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்குமாறு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்துள்ளது.
இந்த நடவடிக்கையை மேற்கொண்ட கனடிய மாண்புமிகு அயலுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலி அவர்களைக் கனடியத் தமிழர் பேரவை மனமுவந்து பாராட்டுகிறது.
முகப்பு Photo @Canadian Tamil Congress