கனடிய தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழா 2026
கனடிய தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழா 2026 – பெருந்திரளான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது
Canadian Tamil Congress அமைப்பின் ஏற்பாட்டில், 19th Annual Thai Pongal Festival and Tamil Heritage Month Gala Dinner நேற்று (24) கனடாவின் மார்க்கம் நகரில் வெகுவாகச் சிறப்புடன் நடைபெற்றது. கனடிய தமிழர் சமூகத்தின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை கொண்டாடும் முக்கிய நிகழ்வாக இந்த விழா அமைந்தது.
இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். Sri Lanka Muslim Congress தலைவர் திரு. Rauff Hakeem அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழர் சமூகத்தினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் அமைதி குறித்த கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். தைப்பொங்கல் போன்ற பண்பாட்டு விழாக்கள் சமூகங்களை ஒன்றிணைக்கும் பாலமாக செயல்படுவதாக அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.




































இந்த நிகழ்வில் Markham Mayor, Richmond Hill, Ajax நகரங்களைச் சேர்ந்த நகராட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், municipal, provincial மற்றும் federal அரசாங்க நிலைகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அதோடு, Police officials, பல்வேறு community organizations, சமூகத் தலைவர்கள், இளைஞர் மற்றும் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

















































Tamil Heritage Month-ஐ முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த Gala Dinner-இல், தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் கலாச்சார நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுகள் மற்றும் சமூக சந்திப்பு அம்சங்கள் இடம்பெற்றன. கனடாவின் பன்முக சமூகத்தில் தமிழர் சமூகத்தின் பங்களிப்புகள், சாதனைகள் மற்றும் எதிர்காலப் பாதைகள் குறித்தும் இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்ற இடம்:
Hilton Toronto Markham Suites Conference Centre
8500 Warden Avenue, Markham, ON L6G 1A5
கனடிய தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழா 2026, தமிழர் சமூகத்தின் ஒற்றுமை, பண்பாட்டு அடையாளம் மற்றும் கனடிய சமூகத்துடன் கொண்டுள்ள வலுவான உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்திய ஒரு நினைவுகூரத்தக்க நிகழ்வாக அமைந்தது.
