கனேடிய அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை மே 27
உடனடி வெளியீட்டுக்காக
மே 27, 2020
கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை
குபெக்கிலும், ஒன்றாரியோவிலும் உள்ள முதியோருக்கான நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் உதவி புரிவதற்குக் கனேடிய ஆயுதப் படையினர் கடந்த சில வாரங்களில் சென்றுள்ளார்கள்.
பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ குபெக்கில் உள்ள நீண்ட காலப் பரமரிப்பு நடவடிக்கையின் தற்போதைய நிலைமை குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக இன்று அறிவித்தார். தேவைக்குக் குறைவான பணியாளர்கள் பணியில் இருப்பது உட்படக் கவலையளிக்கும் பல விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த அறிக்கை குபெக் மாகாணத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ நிலைமைகள் குறித்த அறிக்கை ஒன்றைக் கனேடிய ஆயுதப் படையினர் நேற்று வெளியிட்டார்கள். முதியோர் வதிவிடங்களிலும், நீண்டகால பராமரிப்பு நிலையங்களிலும் உள்ள நிலைமைகள்; குறித்து முதல்வர்களுடன் நாளை நடத்தும் வாராந்த கலந்துரையாடலில் உரையாடவுள்ளதாகப் பிரதம மந்திரி உறுதி செய்துள்ளார்.
கோவிட்-19 உலகத்தொற்றுநோய் வேளையில் கனேடியர்களுக்கு ஆதரவளிப்பதற்குக் கடந்த வாரங்களில் பல பொருளாதார உதவித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும், அண்மையில் பட்டம் பெற்றோருக்கும் எதிர்வரும் சில மாதங்களுக்கு உதவியளிப்பதற்கான 9 பில்லியன் டொலர் திட்டமும் இந்தப் பொருளாதாரத் திட்டத்தில் அடங்குகிறது. தற்போது மாகாணங்களிலும், பிராந்தியங்களிலும் சில பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகி, பலர் பணிக்குத் திரும்பும் வேளையில், பல வேலைகொள்வோர் பணியாளர்களைப் பணிக்கமர்த்த முற்பட்டுள்ளார்கள். கனேடிய இளையோருக்கான 45,000 வேலைவாய்ப்புகள் Canada.gc.ca இல் உள்ளன.
கனடா முழுவதிலும் மாகாணங்களும், பிராந்தியங்களும் பொருளாதார செயற்பாடுகளை முழுமையாகவோ, பகுதியாகவோ மீள ஆரம்பிக்கும் வேளையில், கனடா அவசர சம்பள மானியம் போன்ற திட்டங்களைப் பயன்படுத்திப் பணியாளர்களை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு வேலைகொள்வோர் அனைவரிடமும் பிரதம மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு
Office of Gary Anandasangaree Member of Parliament for Scarborough-Rouge Park 3600 Ellesmere Rd, Unit 3 Scarborough, Ontario M1C 4Y8 Tel/Tél. : 416-283 1414
அல்லது உங்கள் நாடாளுமன்ற உறுப்பினரைத் தொடர்பு கொள்ளுங்கள்