கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை-மே 8
உடனடி வெளியீட்டுக்காக
மே 8, 2020
கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை
ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்பற்றோர் விபரங்களைக் கனடா புள்ளிவிபரப் பிரிவு (Statistics Canada) வெளியிட்டபோது இந்த உலகத் தொற்றுநொயால் கனேடியர்கள் தற்போது துன்பப்படுகிறார்களென்ற, எமக்குத் தெரிந்த விடயத்தையே அது உறுதிப்படுத்தியது. கோவிட்-19 ஐ உலகம் எதிர்கொள்ளும் நிலையில் கனேடியர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. வேலை இழந்துள்ள கனேடியர்கள், இந்தப் பிரச்சினையில் இருந்து அவர்களை மீட்பதற்கான திட்டம் ஒன்று இருக்கிறதென்பதை அறிய விரும்புகிறார்கள். கனேடிய அரசு தற்போது ஆதரவாக இருப்பதுடன், பொருளாதாரத்தை மீண்டும் பலமாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது.
கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவை (Canada Emergency Response Benefit (CERB)) 7 மில்லியனுக்கும் அதிகமானோர் பெறுவதாகப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று தெரிவித்தார். கனடா அவசர சம்பள மானியம் (Canada Emergency Wage Subsidy (CEWS)) கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வேலை கொள்வோர் ஏறத்தாழ 2 மில்லியன் பணியாளர்களுக்கான மானியத்துக்காக விண்ணப்பித்துள்ளார்கள். மாகாணங்களும் பிராந்தியங்களும் எதிர்வரும் மாதங்களில் படிப்படியாக பொருளாதார செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும்போது, CERB இற்கான தேவை குறைவடைந்து, சம்பள மானியம் முக்கிய பங்கை ஆற்றவுள்ளது.
பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலும், மீளத் திறக்கப்படவுள்ள வணிக நிறுவனங்களுக்கு உதவியாகவும் ஊநுறுளு திட்டத்தை ஜூன் மாதத்தின் பின்னரும் அரசு தொடருமெனப் பிரதம மந்திரி அறிவித்தார். நீடிப்புக் குறித்த மேலதிக விபரங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும். பணியாளர்களை பணிநீக்கம் செய்த வேலைகொள்வோர், அவர்களை மீண்டும் பணியில் இணைக்கவேண்டுமென ஊக்குவிக்கும் அரசு, இதுவரை CEWS இற்கு விண்ணப்பிக்காவிட்டால் Canada.ca இல் விண்ணபிக்குமாறும் கோருகிறது. கனடா அவசர வணிகக் கணக்கு (Canada Emergency Business Account (CEBS)) மூலம் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வணிக நிறுவனங்களுக்குக் கடன்களும் வழங்கப்பட்டுள்ளன. நாடெங்கும் உள்ள வேலைகொள்வோர், கனேடியர்களைப் பணியணியில் பேணுவதற்கு CEBA, CEWS ஆகியவற்றின் மூலம் அரசு உதவியளிக்கிறது.
மிக அதிகமான பணியாளர்கள், சிறு வணிக நிறுவனங்கள், குடும்பங்கள், இளையோர் ஆகியோருக்கும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட சில பிரிவுகளுக்கும் உதவியை வழங்கக் கனேடிய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. புத்தாக்கம், விஞ்ஞானம், தொழற்துறை ஆகியவற்றுக்கான அமைச்சரான நவ்தீப் பெய்ன்ஸ், புதிய தொழிற்துறை மூலோபாய சபை (Industry Strategy Council) ஒன்றை வழிநடத்தவுள்ளார். மொனீக் லெறோவின் (Monique Leroux) தலைமையிலான இந்தச் சபை, உலகத் தொற்றுநோய் எவ்வாறு குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளைப் பாதிக்கிறதெனவும், அவற்றுக்கு எவ்வாறு சிறப்பான உதவியை வழங்கலாமெனவும் விரிவாக ஆராயவுள்ளது. கோவிட்-19 இன் பாதிப்பைச் சமாளிப்பதற்குத் தொழிற்துறையும், அரசும் இணைந்து செயற்படும் பிரத்தியேக மன்றமாக இது விளங்கும்.
Streamed live By CPAC
கனேடிய பாரம்பரிய அமைச்சர் கில்போ (Guilbeault) கலாச்சார, பாரம்பரிய, விளையாட்டுத்துறை அமைப்புக்களுக்கென ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 500 மில்லியன் டொலர் நிதியம் குறித்த மேலதிக விபரங்களை இன்று வெளியிட்டார். கலாச்சார, விளையாட்டுத்துறை அமைப்புக்களுக்கு நிதியை வழங்குவதற்கு ஏற்ற வகையில் இன்று முதல் பங்காளி அமைப்புக்கள் தொடர்பு கொள்ளப்படும். Canadian Heritage அமைப்பு ஏற்கனவே உள்ள வழிகளைப் பயன்படுத்தி இயலுமான விரைவில் பணத்தை வழங்குவதற்காக , Canada Council for the Arts, Canada Media Fund, FACTOR, Musicaction மற்றும் Telefilm Canada ஆகிய அதன் பங்காளிகளுடன் நெருக்கமாகச் செயலாற்றுகிறது.
மேலதிக தகவல்களுக்கும்

Gary.Anandasangaree.C1A@parl.gc.ca
Office of Gary Anandasangaree| Bureau de Gary Anandasangaree
Member of Parliament for Scarborough-Rouge Park | Député de Scarborough-Rouge Park
3600 Ellesmere Rd, Unit 3 | 3600, Ellesmere Road, bureau 3
Scarborough, Ontario M1C 4Y8| Scarborough (Ontario) M1C 4Y8
Tel/Tél. : 416-283 1414