கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை- மே 12
PM Justin Trudeau provides update on federal response to COVID-19
Prime Minister Justin Trudeau provides an update from outside his home in Ottawa on the federal government’s response to the ongoing COVID-19 (coronavirus disease) pandemic, including newly announced measures aimed at providing financial support to Canada’s seniors.
உடனடி வெளியீட்டுக்காக
மே 12, 2020
கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை
கனேடிய அரசு கோவிட்-19 உலகத் தொற்றுநோயின் ஆரம்பத்தில் இருந்தே முதியோருக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. பொருட்கள் சேவைகள் வரி (GST) மீளளிப்பு மூலம் ஏப்ரலில் ஒருமுறை சிறப்புக் கொடுப்பனவாக 1.3 பில்லியன் டொலர் வழங்கப்பட்டது. நான்கு மில்லியனுக்கும் அதிகமான முதியோர் இந்த உதவி மூலம் பயன்பெற்றார்கள். தனித்து வாழும் முதியோருக்குச் சராசரியாக 375 டொலரும், தம்பதிகளான முதியோருக்குச் சராசரியாக 510 டொலரும் இதன் மூலம் வழங்கப்பட்டது. பலசரக்குப் பொருட்களையும், மருந்துகளையும் விநியோகிப்பது போன்ற, கனேடிய முதியோருக்கு நடைமுறையில் தேவைப்படும் உதவிகளை வழங்கும் சமூக அமைப்புக்களுக்கும் கனேடிய அரசு உதவிகளை வழங்கியுள்ளது.
இந்த நெருக்கடியான நேரத்தில் கனேடிய முதியோருக்கு உதவியையும், அதிக நிதிப் பாதுகாப்பையும் வழங்கும் வகையில் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று மேலதிக நடவடிக்கைகளை அறிவித்தார். இவற்றில் பின்வருவனவும் அடங்குகின்றன:
• முதுமைக்கால பாதுகாப்புக் கொடுப்பனவு (Old Age Security (OAS)) ஓய்வூதியம் பெறுவதற்குத் தகுதியுள்ள முதியோருக்கு வரி விலக்குள்ள ஒருமுறை கொடுப்பனவாக 300 டொலரையும், வருமானத்திற்கு மேலதிகமான உறுதிக் கொடுப்பனவுக்குத் (Guaranteed Income Supplement (GIS)) தகுதி பெறும் முதியோருக்கு மேலதிகமாக 200 டொலரையும் வழங்குவதற்கு மேலதிகமாக 2.5 பில்லியன் டொலர் பணத்தைச் செலவிடும். இதன் மூலம், OAS மற்றும் GIS ஆகிய இரண்டையும் பெறத் தகுதியுள்ள தனிநபர்களுக்கு 500 டொலர் வழங்கப்படுவதுடன், கோவிட்-19 காரணமாக ஏற்படும் மேலதிக செலவினங்களை ஈடுசெய்ய உதவியாகவும் இருக்கும்.
• தனிமையைக் குறைக்கும் சமூகம் சார்ந்த திட்டங்களைச் செயற்படுத்தும், முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மற்றும் சமூக ஆதரவு வலையமைப்பைப் பேணுவதற்கு அவர்களுக்கு உதவியளிக்கும் அமைப்புக்களுக்கு ஆதரவாக New Horizons for Seniors Program திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு மேலதிகமாக 20 மில்லியன் டொலர் முதலிடப்படும்.
• முதியோரின் 2019 ஆம் ஆண்டுக்கான வருமானம் குறித்த தகவல்கள் ஆய்வு செய்யப்படாவிட்டால், GIS மற்றும் Allowance கொடுப்பனவுகள் தற்காலிகமாக நீடிக்கப்படும். மிகவும் நலிவடைந்த முதியோர், அவர்களுக்கு உதவி அதிகமாகத் தேவைப்படும் நேரத்தில் கொடுப்பனவுகளைத் தொடர்ந்து பெறுவதை இது உறுதிப்படுத்தும், கொடுப்பனவுகள் தடைப்படுவதைத் தவிர்ப்பதற்காக முதியோர் அவர்களது 2019 ஆம் ஆண்டுக்கான வருமானம் குறித்த தகவல்களை இயலுமான விரைவிலும், 2020 ஒக்ரோபர் முதலாந் திகதிக்கு முன்பாகவும் சமர்ப்பிக்கவேண்டுமெனக் கோரப்படுகிறார்கள்.
கனேடிய அரசு கோவிட்-19 இன் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார பாதிப்புக்களைத் தொடர்ந்து கண்காணித்துப் பதில் நடவடிக்கை எடுப்பதுடன், முதியோர் உட்பட அனைத்துக் கனேடியர்களுக்கும் ஆதரவளிப்பதற்கும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் தயாராக இருக்கிறது.
மேலதிக தகவல்களுக்கும்