NationNews

கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை மே 14

உடனடி வெளியீட்டுக்காக

மே 14, 2020

கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை

கனேடியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மிகச் சவாலான நிலைமைகளை எதிர்கொண்டதுடன் கடினமான முடிவுகளையும் எடுக்கவேண்டியிருந்தது. கனேடிய பொருளாதாரத்தினதும், உணவு விநியோக சங்கிலியினதும் முக்கியமான ஒரு பகுதியான மீன்வளத்துறையைப் பொறுத்தவரை, மீன்பிடிப் படகில் இடைவெளியைப் பேணுவது, அல்லது மீன்பிடியைக் கைவிடுவது என்பனவே தெரிவுகளாக இருந்தன. இதற்கு மேலதிகமாக விலையும், தேவையும் குறைவடைந்தமையால் மீனவர்கள் மீதும் அவர்களது குடும்பங்கள் மீதும் இது நிதி அழுத்தத்தையும் ஏற்படுத்தியது.

Streamed live @ cpac

Prime Minister Justin Trudeau addresses Canadians from outside his home in Ottawa on the federal government’s response to the ongoing COVID-19 (coronavirus disease) pandemic.

மீனவருக்கு ஆதரவாக ஏறத்தாழ 470 மில்லியன் டொரை முதலிடுவதாகப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார். இந்தப் பணத்தின் ஒரு பகுதி, மீனவருக்கான கொடுப்பனவை (Fish Harvesters Benefit) உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும். இந்தப் மீன்பிடிக் காலத்தில் 25 சதவீத வருமானக் குறைவை எதிர்பார்ப்போருக்கு அவர்களது இழப்பின் 75 சதவீதத்தை ஈடு செய்வதற்குப் 10,000 டொலர் வரையான உதவி கிடைக்கும். நிலைமை மேம்படும் காலம் வரை தொழிலை மேற்கொள்வதற்கு உதவி தேவைப்படும் சொந்த வணிக முயற்சியைக் கொண்டுள்ள மீனவர்களுக்குத் திருப்பிச் செலுத்தத் தேவையற்ற 10,000 டொலர் வரையான மானியம் மேலதிகமாக வழங்கப்படும். எதிர்வரும் ஆண்டு குறித்துக் கவலை கொண்டுள்ள பணியாளர்களுக்காக, முந்தைய ஆண்டுகளின் வருமானத்தின் அடிப்படையில் மீனவர்கள் வேலைக் காப்புறுதிக் கொடுப்பனவுகளுக்கு விண்ணப்பிக்கக்கூடிய வகையில் வேலைக்காப்புறுதி விதிகளை அரசு மாற்றவுள்ளது. விவசாயிகளுக்கும், மீன்வளர்ப்போருக்குமாக அரசு குயசஅ ஊசநனவை ஊயயெனய வின் ஊடாக 100 மில்லியன் டொலர் விவசாயம் மற்றும் உணவு வணிக தீர்வுகள் நிதியத்தை (Agriculture and Food Business Solutions Fund) ஆரம்பிக்கிறது.

கனேடிய ஆயுதப் படையினர் கோவிட்-19 இற்கான அவசர நடவடிக்கைகள் உட்படக் கடினமானதும், ஆபத்தானதுமான பணிகளை எப்போதும் செய்கிறார்கள். இதனால், பெரும் எண்ணிக்கையான முன்னாள் படையினர் சேவைக் காலத்தின் பின்னர் நாட்பட்ட வலியுடன் வாழ்கிறார்கள். மக்மாஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் முன்னாள் கனேடியப் படையினருக்கான நாட்பட்ட வலி நிலையத்தை (Chronic Pain Centre of Excellence for Canadian Veterans) அமைப்பதாகப் பிரதம மந்திரி இன்று அறிவித்தார். முன்னாள் படையினருக்குத் தேவையான உதவியை வழங்குவதற்காக தேசிய மட்ட ஆய்வு, பயிற்சி, கல்வி என்பவற்றில் இந்த நிலையம் கவனம் செலுத்தும்.

இந்த வைரஸ{க்கு எதிரான நடவடிக்கையில் கனேடிய அரசு ஆரம்பத்தில் இருந்தே முதற் தேசம் (First Nations), இனுயிட் (Inuit), மேட்டி தேசம் (Metis Nation) ஆகியவற்றின் தலைவர்களுடன் செயற்பட்டு வருகிறது. கோவிட்-19 உலகத் தொற்றுநோய் வேகமாகப் பரவ ஆரம்பித்த பின்னர், பூர்வகுடியினரின் வணிக நிறுவனங்களுக்கு வட்டியற்ற கடன்களாகவும், திருப்பிச் செலுத்தத் தேவையற்ற உதவியாகவும் 306 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.  முதற் தேசம் (First Nations), இனுயிட் (Inuit), மேட்டி தேசம் (Metis Nation) ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கு 75 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணம் வழங்கப்பட்டுள்ளதுடன், வீட்டில் இடம்பெறும் வன்முறையில் இருந்து தப்பியோடும் பூர்வகுடிப் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் உதவியாக அவசர ஷெல்ட்டர்களுக்கு 10 மில்லியன் டொலரும் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆரம்ப நடவடிக்கையே. கோவிட்-19 இற்கு எதிராக பூர்வகுடிச் சமூகங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு மேலதிக உதவி வழங்கப்படவேண்டும்.

கோவிட்-19 பரவலை எதிர்கொள்ளும் சஸ்கெச்சுவானின் வடபகுதி போன்ற இடங்களில் சமூகங்களுக்கு இத்தகைய ஆதரவு தொடர்ந்து தேவையென்பது மிகத் தெளிவாகத் தெரியவந்துள்ளது. இதற்காக, Meadow Lake Tribal Council இற்கும், Metis Nation-Saskatchewan இற்கும் அவர்களின் உலகத் தொற்றுநோய் எதிர்ப்புத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக, கனேடிய அரசு சமூகங்களுடன் சேர்ந்து உணவு முதல் தேவைப்படும் பொருட்கள் வரையான அனைத்துக்குமாக 2.3 மில்லியன் டொலரிலும் அதிகமான பணத்தை வழங்கும்.

தேசிய பூங்காக்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடைவெளி பேணக்கூடிய சந்தர்ப்பம் உள்ள இடங்களில்  காட்டு நடைபாதைகளையும், பசுமையான இடங்களையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய வகையில் ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து சில தேசிய பூங்காக்கள் பகுதியளவாக மீளத் திறக்கப்படுமெனவும் பிரதம மந்திரி மேலும் அறிவித்தார். ஆனால், அனைத்துக் கனேடியர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகச் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். வடக்கில் உள்ள எளிதில் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், படகு செலுத்தல் தொடர்பான புதிய விதிகளை அரசு ஜூன் மாதம் முதலாந் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தும். கனடாவின் ஆர்க்டிக் கரையோர நீர்நிலைகளிலும், குபெக்கின் வடக்கிலும், லப்றடோரின் கரையோரப் பகுதிகளிலும் பொழுதுபோக்குப் படகுகள் எவையும் அனுமதிக்கப்பட மாட்டா. அத்தியாவசிய மீன்பிடி, வேட்டையாடல் அல்லது உள்ளுர் சமூகத்தினரின் பயன்பாட்டை இந்தத் தடை பாதிக்க மாட்டாது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!