Nation

கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை மே 26

உடனடி வெளியீட்டுக்காக

மே 26, 2020

கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை

கனேடிய வேலைவாய்ப்புக்களும் வணிக நிறுவனங்களும், ஏனைய நாடுகளின் பொருளாதாரங்கள் உறுதியாகவும், ஆக்கத்திறனுடனும் இருப்பதில் தங்கியிருப்பதால், இந்தச் சவாலை அனைவரும் எவ்வாறு கடக்கிறார்களென்பது முக்கியமானது. உலகெங்கும் கோவிட்-19 காரணமாக இதுவரை 344,000 உயிர்கள் இழக்கப்பட்டு, 5.3 மில்லினுக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவ்வாண்டில் உலக பொருளாதாரம் பாரிய அளவு சுருங்கி 300 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வேலை இழப்பதுடன், 30 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் மோசமான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள்.

Prime Minister Justin Trudeau addresses Canadians from outside his home in Ottawa on the federal government’s response to the ongoing COVID-19 (coronavirus disease) pandemic. In his remarks, the prime minister announces the signing of contracts to supply face masks and ventilators and comments on a Canadian Armed Forces report concerning troubling conditions inside long-term care homes in Ontario where the military is providing assistance.

கோவிட்-19 உலகத் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள அபிவிருத்தி நெருக்கடிக்கான உறுதியான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்காக மே 28 ஆந் திகதி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குரெறெஸ் (António Guterres) ஜமெய்க்காவின் பிரதம மந்திரி அன்றூ ஹோல்நெஸ் (Andrew Holness) ஆகியோருடன் கனடா உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்துமெனப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார். விடு;பட்டவர்கள் யாரெனக் கண்டுபிடித்து அவர்களைத் தூக்கிவிடுவதற்கான சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவேண்டிய தேவை உள்ளது. கோவிட்-19 இற்கு எதிரான போராட்டத்தில் உலகை ஒருங்கிணைப்பதற்குக் கனடா அதன் பங்களிப்பை வழங்கத் தயாராக இருக்கிறது.

ஒன்றாரியோவில் உள்ள நீண்டகால பராமரிப்பு நிலையங்கள் குறித்துக் கனேடிய ஆயுதப் படையினர் சமர்ப்பித்த அறிக்கை குறித்தும் பிரதம மந்திரி இன்று கருத்து வெளியிட்டார். நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் அவதானிக்கப்பட்ட மிகுந்த மனக்கவலையை ஏற்படுத்தும் விடயங்களை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை ஒன்றாரியோ மாகாண அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. நீண்டகால பரமரிப்பு நிலையங்களில் உள்ள முதியவர்களுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றாரியோ மாகாண அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கச் சமஷ்டி அரசு உறுதியளித்துள்ளது.

கனேடியர்களையும், முன் வரிசைப் பணியாளர்களையும் பாதுகாப்பதற்காக அரசு கடந்த பத்து வாரங்களில் 40 விமானங்களில் தனிநபர் பாதுகாப்புக் கருவிகளைப் பெற்றுக்கொண்டது. இதேவேளை, உள்ளுர் உற்பத்தியிலும் முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 மில்லியன் சுவாசக் கவசங்களைத் தயாரிப்பதற்கு General Motors நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளுமெனப் பிரதம மந்திரி இன்று அறிவித்தார். இத்தகைய முதலீடுகள் மக்களைப் பாதுகாத்து, கோவிட்-19 இன் பரவல் வேகத்தைக் குறைப்பதற்கு உதவியாக இருப்பதுடன், சவால்களை எதிர்கொள்ளும் மோட்டார்க் கார்த் தொழிற்துறையின் ஓஷவா பணியாளர்களுக்கு நல்ல சம்பளத்துடனான வேலைவாய்ப்புக்களையும் வழங்கவுள்ளன.

இதைப் போன்று கோவிட்-19 இற்கான புதியவையும், மேம்பட்டவையுமான பரிசோதனைக் கருவிகளையும், ஏனைய பொருட்களையும் தயாரிப்பதற்குக் கனடா முழுவதிலும் உள்ள நிறுவனங்களுக்கும் ஆய்வுகூடங்களுக்கும் அரசு உதவியளிக்கிறது. நோபல் பரிசு பெற்ற கனேடியரான கலாநிதி Art McDonald மற்றும் அவரது குழுவினர் ஆகியோருக்கும் Vexos இற்கும் இடையிலான கூட்டு முயற்சி மூலம் 10,000 சுவாச உதவிக் கருவிகளைத் தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் கோடை காலத்தில் அவற்றின் விநியோகம் ஆரம்பமாவதுடன் கனடாவில் தயாரிக்கப்படும் சுவாச உதவிக் கருவிகளின் மொத்த எண்ணிக்கை 40,000 ஆக அதிகரிக்கும்.

700 வரையான இளையோருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புதிய நிதி ஒதுக்கீடு மூலம் விவசாயத்துறைக்கு ஆதரவளிக்கும் திட்டத்தையும் பிரதம மந்திரி அறிவித்தார். பயிர்ச்செய்கைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கனேடியர்களுக்கான உணவை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகள் முன்னொருபோதும் இல்லாத அளவு கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், கோவிட்-19 காரணமாக வேலையாட்களைப் பெற்றுக் கொள்வதில் அவர்களில் பலர் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இன்று அறிவிக்கப்பட்ட நிதியுதவி, எமக்கு உணவை உற்பத்தி செய்வோருக்கு ஆதரவளிப்பதுடன், இளையோருக்குப் புதிய வாய்ப்புக்களையும் வழங்கும்.

மேலதிக தகவல்களுக்கு

Office of  Gary Anandasangaree Member of Parliament for Scarborough-Rouge Park 3600 Ellesmere Rd, Unit 3 Scarborough, Ontario  M1C 4Y8  Tel/Tél. : 416-283 1414

 அல்லது உங்கள் நாடாளுமன்ற உறுப்பினரைத் தொடர்பு கொள்ளுங்கள்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!