கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை-மே 7
உடனடி வெளியீட்டுக்காக
மே 7, 2020
கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை
வீடுகளில் இருக்குமாறு பெருமளவு கனேடியர்கள் கோரப்படும் அதேவேளை, ஒவ்வொரு நாளும் வேலைக்குச் சமூகமளிக்குமாறு பல மில்லியன் கனேடியர்கள் கோரப்படுகிறார்கள். இவர்கள் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதன் மூலம் எமது குடும்பங்கள் தொடர்ந்து பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்கிறார்கள். கனேடியர்கள், முன்னரை விடவும் இவர்களில் அதிகம் தங்கியிருப்பதால், அவர்களுக்கு அவசியமாகத் தேவைப்படும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்குக் கனேடிய அரசு மாகாணங்களுடனும், பிராந்தியங்களுடனும் சேர்ந்து செயற்படுகிறது.
Streamed live CPAC மே 7, 2020
தமது அத்தியாவசிய பணியாளர்களின் சம்பளங்களை அதிகரிப்பதற்கான செலவைப் பகிர்ந்து கொள்வதற்கான திட்டங்களை அனைத்து மாகாணங்களும், பிராந்தியங்களும் உறுதி செய்துவிட்டன, அல்லது அதை உறுதி செய்யும் நடைமுறை மேற்கொள்கின்றனவெனப் பிரதம மந்;திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார்.
குறைந்த வருமானம் பெறும் அத்தியாவசிய பணியாளர்களின் சம்பளங்களை அதிகரிப்பதற்கு உதவியாகக் கனேடிய அரசு 3 பில்லியன் டொலர் வரையான பணத்தை வழங்கும். எந்தப் பணியாளர்கள் உதவிக்குத் தகுதி பெறுவார்களெனவும், அவர்களுக்கு எவ்வளவு உதவி வழங்கப்படுமெனவும் மாகாணங்களும், பிராந்தியங்களும் முடிவு செய்யவுள்ளன.
நிச்சயமற்ற தற்போதைய காலகட்டத்தில், கனேடியர்களுக்கும், கனேடிய வணிக நிறுவனங்களுக்கும் உதவியளிக்கும் விரிவான பொருளாதாரத் திட்டத்தின் அங்கமாக இந்த நடவடிக்கைகள் அமைகின்றன. மாறிவரும் நிலைமையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, உடல்நலம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கும், பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து மேலதிக நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.
மேலதிக தகவல்களுக்கும்
Gary.Anandasangaree.C1A@parl.gc.ca
Office of Gary Anandasangaree| Bureau de Gary Anandasangaree
Member of Parliament for Scarborough-Rouge Park | Député de Scarborough-Rouge Park
3600 Ellesmere Rd, Unit 3 | 3600, Ellesmere Road, bureau 3
Scarborough, Ontario M1C 4Y8| Scarborough (Ontario) M1C 4Y8
Tel/Tél. : 416-283 1414