NationNews

கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கான உதவிகள் நீடிக்கப்படுகின்றன

At a news conference on Parliament Hill, Prime Minister Justin Trudeau provides an update on the federal government’s response to the COVID-19 (coronavirus disease) pandemic. He is joined by federal ministers Chrystia Freeland (finance and deputy prime minister), Patty Hadju (health), Dominic LeBlanc (intergovernmental affairs), Marie-Claude Bibeau (agriculture) and by Dr. Theresa Tam, Canada’s chief public health officer, and Dr. Howard Njoo, the deputy chief public health officer. Drs. Tam and Njoo also release new modelling data concerning the possible impact of COVID-19 in Canada. The prime minister announces new direct support for businesses affected by the pandemic. The new Canada Emergency Rent Subsidy will provide support to

Video @ cpac

businesses directly rather than through landlords. The new program would replace the now-expired commercial rent subsidy aimed at landlords. The government is also extending the Canada Emergency Wage Subsidy until June 2021. Ottawa is also making an additional investment of $100 million through the Emergency Food Security Fund to support food banks and local food organizations. The federal government also announces top-up funding to the territories for their COVID-19 responses.

ஊடனடி வெளியீட்டுக்கு By:

Office of  Gary Anandasangaree| Bureau de Gary Anandasangaree

Member of Parliament for Scarborough-Rouge Park | Député de Scarborough-Rouge Park

3600 Ellesmere Rd, Unit 3 | 3600, Ellesmere Road, bureau 3

Scarborough, Ontario  M1C 4Y8| Scarborough (Ontario)  M1C 4Y8                                                    

Tel/Tél. :416-283-1414

ஒக்ரோபர் 10, 2020

கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கான உதவிகள் நீடிக்கப்படுகின்றன

கோவிட்-19 உலகத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கனேடிய வணிக நிறுவனங்கள், பணியாளர்களைத் தொடர்ந்தும் வேலையில் வைத்திருப்பது, பணப் புழக்கத்தை அதிகரிப்பது, வாடகையைச் செலுத்துவது ஆகியவற்றுக்கு உதவியளிப்பதற்குக் கனேடிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. எமது பொருளாதாரத்தின் சில பிரிவுகள் முன்னேற்றமடைந்தாலும், ஏனைய பிரிவுகள் வருமானக் குறைவு, அதிகரித்த செலவினம், கோவிட்-19 உலகத் தொற்றுநோய் காரணமான உறுதியற்ற தன்மை என்பவற்றால் தொடர்ந்தும் சிரமப்படுகின்றன.

துணைப் பிரதம மந்திரியும், நிதியமைச்சருமான கௌரவ கிறிஸ்ரியா ஃபிறீலண்ட் அவர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கும், வருமானக் குறைவை எதிர்கொள்ளும் ஏனைய நிறுவனங்களுக்கும் உதவியளிப்பதற்கான அரசின் நோக்கத்தை வெளியிட்டுள்ளார். இந்த வணிக நிறுவனங்கள் வைரஸ் பரவலின் இரண்டாவது அலை, பனிக்காலம் ஆகியவற்றைப் பாதுகாப்பாகக் கடந்து செல்வதற்கும், அவற்றின் செலவினங்களை ஈடுசெய்வதற்கும், சமூகங்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவதற்கும், பலமான மீட்சிக்குத் தயாராகுவதற்கும் உதவியளிப்பதற்கான சட்டமூலத்தை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில்

  • புதிய கனடா அவசரகால வாடகை மானியம் (Canada Emergency Rent Subsidy), கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்ட தகுதிபெறும் நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டு ஜூன் வரை  வாடகை, அடமானக் கடன் என்பவற்றுக்கான உதவியை இலகுவாகப் பெறுவதற்கு வழிவகுக்கும். வாடகை மானியம், தகுதிபெறும் வாடகைதாரர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் அதேவேளை, சொத்துக்களின் உரிமையாளர்களுக்கும் உதவியளிக்கப்படும். இந்தப் புதிய மானியம், வருமானக் குறைவைச் சந்தித்துள்ள வணிக நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், லாபநோக்கற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, அவர்களது இழப்புக்கு ஏற்றவாறாக, ஆகக் கூடியது 65 சதவீதம் வரை, அவற்றின் தகுதி பெறும் செலவினத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை 2020 டிசம்பர் 19 ஆந் திகதி வரை வழங்கும். செப்ரெம்பர் 27 ஆந் திகதியில் இருந்து ஒக்ரோபர் 24, 2020 வரையான காலப்பகுதிக்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கக் கூடியதாக இருக்கும்.
  • தகுதியான பொதுச் சுகாதார அமைப்பின் உத்தரவுக்கு அமைவாகத் தற்காலிகமாக மூடப்படும் நிறுவனங்களுக்கு 65 சதவீத மானியத்திற்கு மேலதிகமாக ஒரு மிகை நிரப்பு கனடா அவசரகால வாடகை மானியமாக (top-up Canada Emergency Rent Subsidy) 25 சதவீதம் வழங்கப்படும். உள்ளுர் பொதுச் சுகாதார முடிவுக்கு அமைவாகத் தற்காலிகமாக மூடப்படும் வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக நிதி உதவி வழங்கப்படுமென சிம்மாசன உரையில் அளித்த உறுதிமொழிப்படி இது அமையும்.
  • கனடா அவசரகால சம்பள மானியம் (Canada Emergency Wage Subsidy) 2021 ஆம் ஆண்டு ஜூன் வரை நீடிக்கப்படுவது, வணிக நிறுவனங்கள் அவற்றின் பணியாளர்களைத் தொடர்ந்து சம்பளப் பட்டியலில் வைத்திருப்பதற்கும், பணியாளர்களை மீளவும் பணியில் இணைத்துக் கொள்வதற்கும் ஊக்கமளிக்கும்.
  •  
  • விரிவாக்கப்பட்ட கனடா அவசரகால வணிகக் கணக்கு (expanded Canada Emergency Business Account (CEBA)) CEBA கடன்களுக்குத் தகுதி பெறும் வணிக நிறுவனங்களும், லாப நோக்கற்ற நிறுவனங்களும் – உலகத் தொற்றுநோயால் தொடர்ந்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தால் – 40,000 டொலர் CEBA கடனுக்கு மேலதிகமாக வட்டியற்ற கடனாக மேலும் 20,000 டொலர் வரையான பணத்தைக் கடனாகப் பெறக்கூடியதாக இருக்கும். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆந் திகதிக்கு முன்பாகக் கடன் திருப்பிச் செலுத்தப்பட்டால், இந்த மேலதிக நிதி உதவியின் அரைப்பங்கு தள்ளுபடி செய்யப்படும். இதற்கு மேலதிகமாக, CEBAவிற்கான விண்ணப்பக் காலக்கெடு 2020 டிசம்பர் 31 வரை நீடிக்கப்படுகிறது..

இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வரும் திகதி, விண்ணப்பிக்கும் முறை உட்பட்ட ஏனைய விபரங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும். மேலதிக நிதி உதவியைப் பெறுவதற்கு கோவிட்-19 காரணமாக வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை உறுதிப்படுத்தும் பத்திரம் சமர்ப்பிக்கப்படவேண்டும்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!