சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் -நீதிக்கான நடை பயணம் -ஓகஸ்ட் 29
நீதிக்கான நடை பயணம் நாளை காலை 8 am பிராம்டன் நகரில் ஆரம்பம்


அரசியல்,வன்முறை,போர் போன்ற பிற காரணிகளால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காகக் காத்துக்கிடக்கும் அவர்களுடைய உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக ஆகஸ்ட் 30-ம் தேதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐ.நா கடந்த 30.08.2011 தேதியன்று அறிவித்தது. இந்தநாளில் போராட்டம் நடத்தியும், பேரணியாகச் சென்று முழக்கங்கள் எழுப்பியும் இந்நாளை கடைப்பிடித்துவருகின்றனர்

இலங்கையில் 1980-ம் ஆண்டிலிருந்தே ஏராளமான தமிழர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும், 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது ஏராளமான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசே காரணம் என காணாமல் போனவர்களின் உறவினர்களும் சாட்சியங்களும் கூறிவருகின்றனர்