சிங்கள – முஸ்லிம் மக்களிடையே கலகம் உண்டாக்கிய ஞானசார தேரர்க்கு நான்கு வருடம் சிறைத் தண்டனை
Sri Lanka hardline monk Gnanasara sentenced 4 years
சிங்கள – முஸ்லிம் மக்களிடையே கலகம் உண்டாக்கிய ஞானசார தேரர்க்கு நான்கு வருடம் சிறைத் தண்டனை
8 வருடங்களுக்கு முதல், மார்ச் 30, 2016 அன்று குறாகலவிலுள்ள புராதன மடாலயமொன்றில் பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாம் மதத்தையும் முஸ்லிம்களையும் அவமதித்துப் பேசியதைத் தொடர்ந்து சிங்கள – முஸ்லிம் சமூகங்களிடையே கலகம் உண்டாகியிருந்தது. இதைத் தொடர்ந்து ஞானசேரர் மீது பதியப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பு இன்று (மார்ச் 28) கொழும்பு உயர்மீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெண்டிகேயால் வழங்கப்பட்டது.
2016 இல் ஞானசேரர் மேற்கொண்ட இந்நடவடிக்கை தேசிய இன, மத சமூகங்களிடையேயான ஐக்கியத்திற்குக் குந்தகம் விளைவித்ததெனக் கூறி நீதிபதி தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையையும் ரூ. 100,000 அபராதத்தையும் விதித்திருக்கிறார்.