ArticlesEntertainmentLatestLiVe நேரடி ஒளிபரப்புNation

சிவாஜி நினைவு நாள் காணொளிக் கருத்தரங்கு “அப்பாவும் பிள்ளையும்” தலைப்பில் இன்று (21-07-2020) பிரபு உரை

உங்கள்The Tamil Journalஇல் சிவாஜி கணேசன் நினைவு நாள் நேரடி Live காணொளிக் கருத்தரங்கு! “அப்பாவும் பிள்ளையும்” தலைப்பில் நடிகர் ‘இளைய திலகம்’ பிரபு இன்று உரை

@ Facebook

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 19-வது நினைவு நாளையொட்டி இணையத்தில் நடந்துவரும் ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும்’ சர்வதேச காணொளிக் கருத்தரங்கின் நிறைவு நாளான இன்று (21-07-2020) நடிகர் இளைய திலகம் பிரபு பேசுகிறார். கருத்தரங்கு இன்று காலை கனடிய நேரம் காலை 8:30 (இந்திய இலங்கை நேரம் மாலை 6:00) மணிக்குத் தொடங்குகிறது.
“அப்பாவும் பிள்ளையும்” என்ற தலைப்பில் நடிகர் பிரபுவும், “தமிழ்த்திரை நடிப்பும் நடிகர் திலகமும்” என்ற தலைப்பில் நடிகர் ராஜேஷும் இன்று கருத்தாக்கம் தருகிறார்கள்.

இன்று காலை கனடிய நேரம் காலை 8:30 (இந்திய இலங்கை நேரம் மாலை 6:00) மணிக்குத் Live தொடங்குகிறது


சிவாஜி கணேசனின் 19-வது நினைவு நாளையொட்டி சர்வதேச அளவில் பல்துறை அறிஞர்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் கலந்துகொள்ளும் ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும்’ என்ற Zoom/Youtube காணொளி வழிக் கருத்தரங்கு ஜூலை 15-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. லண்டன் – அனாமிகா களரி பண்பாட்டு மையம், திருப்பத்தூர் – தூய நெஞ்சகக் கல்லூரியின் ‘மாற்று நாடக இயக்கம்,’ சென்னை – ‘யா-கார் தியேட்டர்’ நாடகக் குழு ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கின்றன.
உங்கள் The Tamil Journalஇல் இணைப்பு:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 19-வது நினைவு நாளையொட்டி இணையத்தில் நடந்துவரும் காணொலிக் கருத்தரங்கில் நிறைவு நாளான இன்று (21-07-2020) “அப்பாவும் பிள்ளையும்’ என்ற தலைப்பில் நடிகர் பிரபு பேசுகிறார்.

சிவாஜி கணேசனின் 19-வது நினைவு நாளையொட்டி சர்வதேச அளவில் பல்துறை அறிஞர்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் கலந்துகொள்ளும் ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும்’ என்ற காணொலி வழிக் கருத்தரங்கு ஜூலை 15-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

லண்டன் – அனாமிகா களரி பண்பாட்டு மையம், திருப்பத்தூர் – தூய நெஞ்சகக் கல்லூரியின் ‘மாற்று நாடக இயக்கம்,’ சென்னை – ‘யா-கார் தியேட்டர்’ நாடகக் குழு ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்தக் கருத்தரங்கு தினமும் மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடைகிறது.

கருத்தரங்கின் நிறைவு நாளான இன்று (21-07-2020) “அப்பாவும் பிள்ளையும்” என்ற தலைப்பில் நடிகர் பிரபுவும், “தமிழ்த்திரை நடிப்பும் நடிகர் திலகமும்” என்ற தலைப்பில் நடிகர் ராஜேஷும் கருத்தாக்கம் தருகிறார்கள்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!