ஜனாதிபதி – சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு
ஜனாதிபதி Sri Lankan President Ranil Wickremesinghe – சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு
நிலவுரிமை, தமிழ்நாட்டு அகதிகள் நிலை குறித்துப் பேச்சு
வடக்கு – கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஒரு சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. வடக்கு கிழக்கில் தமிழர்களின் நிலவுரிமைகளை நிலைநாட்டுதல், மீள்குடியமர்வு, நல்லிணக்கம் தொடர்பான சட்டங்களை மீளாய்தல், இந்திய அகதிமுகாம்களில் வாடும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை ஆராய்தல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவட்ட அபிவிருத்தி போன்ற விடயங்கள் இச்சந்திப்பின்போது பேசப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சாணக்கியன் ராசமாணிக்கம், ஜி.கருணாகரன், ரீ.கலையரசன் மற்றும் குலசிங்கம் திலீபன் ஆகியோர் தமிழர் தரப்பில் பங்குபற்றியிருந்தனர். அரசாங்கத் தரப்பில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, உயர்கல்விக்கான ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், ஜநாதிபதி செயலாளர் சமன் எக்கநாயக்கா மற்றும் பிரதமரின் செயலாளர் அநுரா திசநாயக்கா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.