டாக்டர் எம்.ஜி.ஆரின் 105ஆவது பிறந்தநாள் இன்று
எம்.ஜி.ஆர். 105-வது பிறந்த நாளானது ஜனவரி17 தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வரும் , அதிமுக நிறுவனருமான எம்.ஜி.இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் அந்த 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி பிறந்தார். சிறுவயது முதலே நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய இவர், 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 1950 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி மற்றும் மந்திரகுமாரி ஆகிய படங்களின் வாயிலாக பலரும் பாராட்டத்தக்க கதாநாயகனாக உருவெடுத்தார். 30 ஆண்டுகள் திரைத்துறையில் வலம் வந்த எம்ஜிஆருக்கு அரசியலிலும் மாபெரும் வெற்றி கிடைத்தது