டொனால்ட் டிரம்ப் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்
2024 ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று (15) அறிவித்ததை அடுத்து அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் அந்த தேர்தலில் ஜோ பைடன் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார் இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்